கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது ஸியா பாரிஸைத் தெருநாய் ஒன்று ஆக்ரோஷமாகக் கடித்தது. அப்போது அவரைக் காப்பாற்ற வந்த சுமார் 6 பேரையும் அதே தெருநாய் கடித்தது. நாய் கடித்ததில் சிறுமி ஸியா பாரிஸுக்குத் தலை, முகம், உதடு, கை, கால் … Read more

Ajith: "மனதளவில் மிடில் கிளாஸ்தான்; சூப்பர் ஸ்டார், தல பட்டங்கள் என்றுமே வேண்டாம்" – அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் நேர்காணல், திரைப்பட விழாக்களில் பல ஆண்டுகளாகவே கலந்துகொள்வதில்லை. சமூக வலைத்தளங்களில்கூட அவர் இருப்பதில்லை. சினிமாவில் நடிப்பதைத் தாண்டி, தனது தனிப்பட்ட வாழ்க்கை, கார் ரேஸிங் எனத் தனக்குப் பிடித்த துறைகளில் பல்வேறு பங்காற்றி சாதனைகளைப் படைத்து வருகிறார். சினிமா, மோட்டார் ரேஸிங் துறையில் சிறந்து விளங்கி வரும் அஜித்குமாருக்கு நேற்று (ஏப்ரல் 28) பத்ம பூஷண் விருது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. மனைவி ஷாலினி, குழந்தைகள் அனுஷ்கா-ஆத்விக் மற்றும் அவரது குடும்பத்தினர் … Read more

Ajith: `சிவாஜி கணேசன் டு அஜித்' – பத்ம விருதுகளை வென்ற தமிழ் நடிகர்கள்!

நடிகர் அஜித் குமார் நடிப்பை தாண்டி ரேஸிங் பக்கமும் தற்போது பரபரப்பாக களமாடி வருகிறார். இவருடைய இந்த பன்முகத்தன்மையைப் பாராட்டும் வகையில் இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் (ஏப்ரல் 28, 2025) குடியரசு தலைவர் மாளிகையில் இந்த விருதை அஜித் பெற்றுக் கொண்டார். அஷ்வின் – அஜித் குமார் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலரையும் கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அஜித்தோடு, நடிகர் பாலைய்யா, கிரிக்கெட் … Read more

Suriya: "எனக்கு இவ்வளவு அன்பைத் தருகிறீர்கள்; யாரு சாமி நீங்களெல்லாம்?" – மும்பையில் சூர்யா பேச்சு

சூர்யாவின் ‘ரெட்ரோ’ மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று ‘ரெட்ரோ’ குழுவினர் மும்பை சென்றிருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் அங்கு சூர்யா பேசுகையில், “ஒவ்வொரு நேரத்திலும் சினிமா துறையில் புதிய விஷயத்தை மாற்றி அமைப்பவர்கள் தேவைப்படுவார்கள். எவராவது வந்து வித்தியாசத்தைக் காட்சிப்படுத்திவிடுவார்கள். அப்படிக் கார்த்திக் சுப்புராஜ் புதிய … Read more

Trump 100: அதிபராகி 100 நாட்களை முடிக்கும் ட்ரம்ப்பின் 10 அதிரடி அறிவிப்புகள் – ஒரு பார்வை!

அமெரிக்க அதிபர் என்று ட்ரம்ப்பைச் சொல்வதை விட, அதிரடி அதிபர் என்று கூறினால் சரியாக இருக்கும். ஆம்… கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி, ‘நான், டொனால்ட் ஜான் ட்ரம்ப்…’ என்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து பரபர அறிவிப்புகளை அறிவித்து வருகிறார் ட்ரம்ப். அதிபராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே, 46 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். அதன் பின்னர், அவர் நகர்த்திய காய்களுக்குப் பின்னால், தனது பிரசாரத்தில் தூக்கிப் பிடித்த ‘மேக் அமெரிக்கா கிரேட் … Read more

Sachein: "அடுத்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க ரீரிலீஸ்" – தயாரிப்பாளர் தாணு பேட்டி

விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு, பெரும் ஆரவாரத்துடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் திரளாகக் கூடி, படத்தை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ரசித்து வருகின்றனர். ரீரிலீஸ் செய்யப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் படம் வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். சச்சின் படத்தில்… மேலும், தனது முக்கிய படங்களை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரிடம் அவரது முயற்சிகள் குறித்துப் … Read more

HBD Swarnalatha: "ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சொர்ணா அங்கப் போய்டுவா!" – அண்ணன் ராஜசேகர் பேட்டி

ஸ்வர்ணலதா… ‘குயில் பாட்டு’, ‘மாலையில் யாரோ’, ‘ஆட்டமா தேரோட்டமா’, ‘முக்காலா’, ‘போறாளே பொன்னுத்தாயி’, ‘மெல்லிசையே’, ‘என்னுள்ளே என்னுள்ளே’ என நம்முள்ளே ஊடுருவிய உன்னதக்குரல். எல்லா பாடல்களும் ஃபேவரைட்ஸ் அல்ல. ஆனால், ஸ்வர்ணலதா பாடிய எல்லா பாடல்களுமே ஃபேவரைட்ஸ்தான் என்று அவரது ரசிகர்கள் சிலாகிப்பதுண்டு. அதனால்தான், ஸ்வர்ணலதா மறைந்து 15 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவரது பிறந்தநாளை மறக்காமல் கொண்டாடித்தீர்த்து வருகிறார்கள். நவரசக் குரலால் நம்மை உயிர்ப்பித்துக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணலதாவின் 52-வது பிறந்தநாளையொட்டி அவரது அண்ணன் ராஜசேகரிடம் பேசினேன். … Read more

Irfan: “மன்னுச்சுகோங்க! நான் அப்படிப்பட்டவன் இல்ல; நடந்தது இதுதான்'' – யூடியூப்பர் இர்பான் விளக்கம்

பிரபல யூடியூப்பரான இர்பான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கார் விபத்து, குழந்தை பிறக்கும் முன்பே பாலினத்தை பொதுவெளியில் சொன்னது, பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ-வை யூடியூப்பில் பதிவிட்டது என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி பேசுபொருளாகி வந்தார். பலரும் அவரது தவறுகளை சுட்டிக் காட்டி விமர்சனம் செய்து வந்தனர். அவ்வகையில் சமீபத்தில் கடந்த ரமலான் பண்டிகையின்போது சென்னை மவுண்ட் ரோட்டில் சாலையோரத்தில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு உடை, உணவுகள் தானமாக வழங்கும் … Read more

HIT 3: "எனக்கு ஸ்பைடர் மேன் என்றால் சிவகார்த்திகேயன்; கேப்டன் அமெரிக்கா என்றால் சூர்யா சார்" – நானி

நானி நடித்திருக்கும் ‘ஹிட்: தி தேர்டு கேஸ்’ (HIT: The Third Case) திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘ஹிட்’ திரைப்பட யுனிவர்ஸின் மூன்றாவது பாகமாக இது உருவாகியுள்ளது. இதில் நானியுடன், நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நானி: ஹிட் 3 கொச்சி நிகழ்ச்சி படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக, படக்குழுவினர் சென்னை, மும்பை, ஹைதராபாத், கொச்சி ஆகியப் பகுதிகளுக்கு சுற்றி வருகின்றனர். இது போன்ற புரொமோஷன் நேர்காணல்களில் நானியும் … Read more