“ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்தேன், ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார்" – அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் கூறியதை அடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு … Read more

ரெட்மி-யின் பெஸ்ட் நோட் விலை இவ்ளோதானா? போட்ரா வெடிய!

இந்தக் கோவிட் வந்தாலும் வந்துச்சு, புது ஃபோன் வாங்க நினைச்சவங்களுக்கு எல்லாம் கஷ்டமா போச்சுங்க… காரணம், உலகளாவிய சிப் செட் தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்ட ஸ்மார்ட் ஃபோன் விலையேற்றம். ஆனால் இப்போ Redmi Note 11 Pro Series ரூ. 20,000-க்குள்ள இந்தியாவில் லான்ச் ஆகப் போகுதுங்குற அதிரடி அறிவிப்பு டெக் லவ்வர்ஸை குஷியில் ஆழ்த்தியிருக்கு! Redmi Note Series பத்தி ஊருக்குள்ள கேட்டுப்பாருங்க. ஒவ்வொரு முறை ரிலீஸ் ஆகும்போதும் ஹவுஸ்ஃபுல் போர்டு போட்டு புக்கிங் சைட்டே … Read more

தன் மனைவியைப் பிரிந்தார் இயக்குநர் பாலா… குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து பெற்றனர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகளை விடுத்து சொல்லப்படாத மனிதர்களின் கதையை இயக்கியவர். இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார். விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா உள்ளிட்ட நடிகர்களை மெருகேற்றியவர் இயக்குநர் பாலாதான். தற்போது மீண்டும் பாலா – சூர்யா கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகிறது. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களுக்குப் பிறகு பாலா … Read more

`திமுக-வினர் அழுத்தம் கொடுத்ததால் முடிவை மாற்றி அறிவித்தேன்' – சஸ்பெண்டான தேர்தல் அலுவலர் விளக்கம்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்ட்டி பேரூராட்சி 10-வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரின் வெற்றியை மறைத்து தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்த சம்பவம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. பழனிச்செல்வி இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி 10-வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமியும், சுயேச்சை … Read more

Exit Polls: உ.பி-யில் முந்தும் பாஜக; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வதென்ன?!

உத்தரப்பிரதேச தேர்தல்: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் இருக்கின்றன. இந்த மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதிக சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதினால் இந்த மாநில தேர்தல் தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி … Read more

தொடங்கியது `துருவ நட்சத்திரம்' டப்பிங்… விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணி திரையில் எப்போது?

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உள்பட பலரும் நடித்துள்ளனர். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு துருக்கியில் ஆரம்பித்து, சில நாடுகளில் நடந்தது. த்ரில்லர் ஜானரான இந்தக் கதையை ரஜினியிடம்தான் முதலில் சொன்னார் கௌதம். ரஜினிக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால், ஏனோ டேக் ஆஃப் ஆகவில்லை. அந்தக் கதையில்தான் விக்ரம் கமிட் ஆனார். … Read more

வேலைத் தேடி சென்ற சிறுமி; பாலியல் தொழிலுக்குத் தள்ளியக் கூட்டம் – அரியலூர் அதிர்ச்சி!

வேலை வாங்கித்தருவதாகக் கூறி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்பவர், வீட்டு வேலைக்குக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார். சாந்தா அந்தச் சிறுமியை கீழப்பழுவூரைச் சேர்ந்த சந்திரா என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்தப் பெண் சிறுமிக்குக் குளிர்பானத்தில் … Read more

"எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்க…"- நம்பியாரின் மனைவி ருக்மணி அம்மாள்! #HBDNambiar

சுருள் முடி, விரிந்த கண்கள், மிரட்டும் மொழி, கைகளைப் பிசைந்தபடி திரையில் வில்லத்தனமாகத் தோன்றும் நம்பியாரின் இன்னொரு முகம் மிக நிதனமானது. சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். நம்பியாரைப் பற்றி அவரது மனைவி ருக்மணி அம்மாள் அளித்துள்ள பேட்டியில் அறிய கிடைக்கும் நம்பியார் திரைக்கு சிறிதும் தொடர்பில்லாதவராக இருக்கிறார். 27.07.1969 தேதியிட்ட விகடன் இதழில் வெளிவந்திருக்கும் பேட்டியிலிருந்து சில பகுதிகள்… “படப்பிடிப்புக்கு போய்ட்டு வந்ததும் நம்பியார் எப்படி இருப்பார்?” “ரொம்ப ப்ரீயா இருப்பார். படப்பிடிப்பிலே என்னென்ன … Read more

"ரிக்வெஸ்ட் அக்செப்டட்" ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இளையராஜா அளித்த பதில்… அமையுமா புதிய கூட்டணி?!

துபாயில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற இளையராஜா, ரஹ்மானின் துபாய் ஸ்டுடியோவிற்குப் போனது வைரலாகி இருக்கிறது. எப்போதும் பிரிந்து கிடக்கும் இரண்டு ரசிகர்களும் மனம் ஒன்றிப்போய் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு எப்படி நடந்தது, இதற்கு யார் பின்னணியில் உறுதுணையாக இருந்தார்கள் என விசாரித்தோம். ஆஸ்கர் விருதுகள் ரஹ்மானுக்குக் கிடைத்த பிறகு நடந்த இசை யூனியன் பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டார். அதில் மனம் விட்டு ரஹ்மானை ராஜா பாராட்டியது இன்று வரை அவர்களது ரசிகர்களால் அதிகமாகப் … Read more

“தற்போது பேசுவது சரியாக இருக்காது!" – 'மாறன்' படத்திலிருந்து விலகியது குறித்து விவேக்

தனுஷின் ‘மாறன்’ படத்தின் திரைக்கதை, டயலாக் ரைட்டராக இருந்த பாடலாசிரியர் விவேக், அதிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘மாறன்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வரும் 11ம் தேதி இப்படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள். தனுஷிற்கு ‘ஜெகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ படங்களை தொடர்ந்து ‘மாறனு’ம் ஒடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் … Read more