அரிசி கொள்முதல் விவகாரம்: மத்திய அரசுக்கு 24 மணி நேரம் காலக்கெடு விதித்த தெலங்கானா முதல்வர்!
தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்யக்கோரி அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மத்திய அரசை எதிர்த்து தலைநகர் டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார். நடப்பு பருவத்தில் தங்கள் புழுங்கல் அரிசியைக் கொள்முதல் செய்துகொள்ள வேண்டும் என்ற தெலங்கானா அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. அதைத் தொடர்ந்து தெலங்கானா அரசு தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு … Read more