விகடன்
HipHop Adhi: “10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்" – தொடங்கிய பயண நினைவுகளைப் பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி
தமிழ் இசை உலகில் ஹிப் ஹாப் இசையை முன்னெடுத்துச் சென்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஆதி – ஜீவா முக்கியமானவர்கள். 2005-ம் ஆண்டு ஆர்குட் (Orkut) மூலம் சந்தித்த இருவரும், இசையின் மீது காட்டிய ஆர்வத்தின் காரணமாக தமிழில் ஒரு சுதந்திரமான இசைக் குழுவை உருவாக்க முடிவு செய்தனர். அதுதான் 2010-ம் ஆண்டு “ஹிப் ஹாப் தமிழா” இசைக் குழு. 2015-ம் ஆண்டு ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் என மூன்று படங்களுக்கும் இசை … Read more
“ஸ்டாலின் Uncle என விஜய் சொன்னது எனக்கு தவறா தெரியல'' – K.S ரவிக்குமார் சொல்லும் காரணம்
தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதுரையில் நடத்தி இருந்தார். அந்த மாநாட்டில் திமுக, அதிமுக, பாஜக கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக ஸ்டாலின் அங்கிள், ராங் அங்கிள் என்று ஸ்டாலினைச் சாடியிருந்தார் விஜய். TVK மதுரை மாநாடு – விஜய் அவரின் இந்த பேச்சுக்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட சிலர் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 28) சென்னையில் செய்தியாளர்களைச் … Read more
`லவ் யூ நண்பா' – ஜாலியாக வைப் பண்ணும் பிரபுதேவா – வடிவேலு; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நடிகர் பிரபுதேவா, வடிவேலுடன் இருக்கும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. ‘லவ் பேர்ட்ஸ்’, ‘ராசையா’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மனதை திருடி விட்டாய்’ உள்ளிட்ட பல படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி மக்களால் கொண்டாடப்பட்டது. பட பூஜை இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்கள். … Read more
காதலின் தோல்வியால் விளைந்த அறத்தின் வெற்றி! – பொற்சுவையின் தியாகம்| #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் பள்ளிப் பாடப் புத்தகங்களில் முல்லைக்குத் தேர் ஈந்தவன் என்று என்னுள் அறிமுகமானவன் வேள்பாரி. அது குறித்து என் தோழியிடம் விவாதிக்கும் போது அவள் கூறினாள் “பாரி என்ன அறிவு கெட்டவனா? முல்லைப் படற ஒரு கொம்பை நட்டு வைத்திருந்தால் போதுமே! தேரையே யாராவது தருவார்களா?” … Read more
எண்ணெய் கொள்முதல்: “இந்தியர்கள் திமிர் பிடித்தவர்கள்'' – USA வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா
ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதை அமலுக்கும் கொண்டுவந்தார். அதற்கு இந்திய தரப்பிலிருந்து அதிருப்தியும் எழுந்தது. பீட்டர் நவேரா இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தனியார் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா ரஷ்ய எண்ணெய்க்கான உலகளாவிய கிளியரிங் ஹவுஸாக செயல்படுகிறது. … Read more
“ட்ரம்பின் 50% வரியை ஈடுசெய்ய, இந்தியா என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” – நிதி அமைச்சகம் விளக்கம்
நேற்றுமுதல் இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், நேற்று இந்திய நிதி அமைச்சகம் மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வை வெளியிட்டது. அதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த வரி குறித்து குறிப்பிடப்பட்டதாவது: “அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக உடனடியாக எந்தப் பாதிப்பும் இல்லை. நீண்டகால அடிப்படையில்தான் பாதிப்பு ஏற்படும். தற்போது நடைபெற்று வரும் இந்தியா–அமெரிக்கா பேச்சுவார்த்தை மிக முக்கியமானது. வர்த்தகம் எந்தெந்த நாடுகளுடன் ஒப்பந்தம்? இந்தியா சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய … Read more
Nivetha Pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நிவேதா பெத்துராஜ்; யார் அவர்?
தனது காதலரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். ‘ஒருநாள் கூத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். அதன்பின் ‘டிக் டிக் டிக்’, ‘திமிரு புடிச்சவன்’, ‘சங்கத் தமிழன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.நடிப்பு மட்டுமல்லாமல் பேட்மிண்டன், ஃபார்முலா ஒன் கார் பந்தயம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்ட இவர், போட்டிகளிலும் பயிற்சிகளிலும் … Read more
Doctor Vikatan: 8 வயதுக் குழந்தைக்கு டான்சில்ஸ் பாதிப்பு; ஆபரேஷன் இல்லாமல் குணமாகுமா?
Doctor Vikatan: எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்த மகனுக்கு டான்சில்ஸ் பாதிப்பு பாடாகப் படுத்தியதால், 9 வயதில் ஆபரேஷன் செய்தோம். இளையவனுக்கும் அதே பிரச்னை. அடிக்கடி சளி, காய்ச்சல் பிரச்னைகளால் அவதிப்படுகிறான். அவசரப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டாம் என்று சிலரும், ஆபரேஷன்தான் சரியான தீர்வு என சிலரும் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி. நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நம் உடலில் ‘டான்சில்’ என்றோர் உறுப்பு … Read more
தயாரிப்பு பக்கம் வரும் செளந்தர்யா ரஜினிகாந்த்; ஹீரோவாக அறிமுகமாகும் `டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர்!
`டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டை, டோலிவுட்டை, பாலிவுட்டை, மாலிவுட்டை என அனைத்துச் சினிமாக்களையும் தன்னுடைய பெயரை உச்சரிக்கச் செய்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அத்திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. Tourist Family அப்படத்தை இயக்கியதோடு சிறியதொரு கதாபாத்திரத்தில் தோன்றி ஆழமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். அப்படியான நடிப்பைக் கொடுத்த அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் … Read more