கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, ‘மதி’ என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள … Read more

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் – நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், … Read more

`உன் சிரிப்பை காணமுடியவில்லை' – ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்' அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய … Read more

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு – நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று … Read more

பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன்புமணி! | கழுகார்

கடுப்பில் மேற்கு மண்டல நிர்வாகிகள்!உத்தரவு போட்ட ‘தில்’ மாஜி… ‘தில்’லான மாஜி அமைச்சர் வசமிருக்கும் மேற்கு மண்டலத்தில், உடன்பிறப்புகள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம். அங்கு ஏற்கெனவே அனைத்து கன்ட்ரோலும் கம்பெனி ஆட்களிடம் சென்றுவிட்டன. அவரின் அனுமதியில்லாமல் அறிவாலயத்துக்குச் செல்வதற்குக்கூட முடியாத நிலையில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ‘தில்’ மாஜி, ‘`இனிமேல் யாரும் நிகழ்ச்சிகளுக்காகப் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது. அதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. உங்களால் முடிந்தால் நிகழ்ச்சியை நடத்துங்கள்… இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இனி யாரும் வசூல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது’’ என்று கறார் … Read more

ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" – கொதிக்கும் டிடிவி தினகரன்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்துப் பேசிய அவர், “எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று வதந்திகள் பரவின. அதையெல்லாம் முறியடித்து எம்ஜிஆரைப் படுக்கவைத்துக் கொண்டே வெற்றி பெற வைத்தவர்கள் ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள். அப்படிப்பட்ட ஊரில் எம்ஜிஆருக்கு … Read more

`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, “ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் … Read more

நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? – சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க!

கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி கோலப் போட்டி Source link