அம்மா உடன் முதல் விமானப் பயணம்: "நீங்கள் இல்லாமல் நான் இல்லை" – நெகிழ்ந்த விமானி!

ஆந்திராவைச் சேர்ந்த விமானி ஒருவர், பயணிகள் முன்னிலையில் பைலட் ஆக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற ஆதரவு அளித்ததற்காக தனது தாய்க்கு நன்றி தெரிவித்து பெருமைப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது. ஜஸ்வந்த் வர்மா என்ற அந்த விமானி பயணிகளிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பேசத்தொடங்கினார். இண்டிகோ விமானம் “இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள். ஏனென்றால் என்னையும் பைலட் ஆக்கவேண்டும் என்ற என் கனவையும் ஆதரித்த நபர், என் அம்மா, முதல்முறையாக என்னுடன் இங்கே பயணம் செய்கிறார். … Read more

Swasika: "ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள்!" – ஸ்வாசிகா சொல்லும் தகவல்

‘லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பிறகு பயங்கர பிஸியாக வலம் வருகிறார் நடிகை ஸ்வாசிகா. ‘லப்பர் பந்து’ திரைப்படத்தில் கதாநாயகி சஞ்சனாவுக்கு அம்மாவாக நடித்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை நியாயம் சேர்த்திருந்தார். Asodha Character – Swasika சமீபத்தில் ‘சூரி’ நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படத்திலும், சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படத்திலும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்வாசிகா. சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் தனக்கு தொடர்ந்து அம்மா கேரக்டர்களே வருவதாகவும், ராம் சரணுக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டார்கள் எனவும் கூறியிருக்கிறார். … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: மான் வேட்டைக்கு சென்ற தலைமை காவலர்; வனத்துறையினரிடம் சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் சரணாலயம், சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், மிளா, கரடி, புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதை தடுப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாட்டுத் … Read more

BCCI: 'உறவை முறித்துக்கொள்கிறோம்'; டிரீம் 11- பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து; காரணம் என்ன?

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார். டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. டிரீம் 11 இணையவழி பண விளையாட்டுகள் மூலம் … Read more

ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்; லாபம் தரும் காளான் வளர்ப்பு; நேரடி பயிற்சி!

காளான் வளர்ப்பு நேரடி பயிற்சி பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் EDII தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி, சனிக்கிழமை `லாபம் கொடுக்கும் காளான் வளர்ப்பு’ என்ற நேரடி பயிற்சியை நடத்த இருக்கிறது. அறிவிப்பு இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பை தொடங்க எவ்வளவு இடம் தேவைப்படும். கொட்டகை அமைப்பது எப்படி, காளான் வளர்ப்பு பைகளை தயார் செய்யும் முறைகள், விதைகள் எங்கு … Read more

Sarathkumar: “இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய்" – TVK விஜய் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் பதில்

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் சரத் குமார், “நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்கள் கொடுத்ததை மீண்டும் உங்களுக்கே கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். நான் டெல்லியில் பிறந்தவன். எனக்கும் டெல்லிக்கும் தொடர்பிருக்கிறது. அதனால்தான் கலைஞர் என்னை எம்.பியாக அறிவித்து டெல்லி அனுப்பினார். இப்போது டெல்லியோடு அரசியல் களத்தில் இணைந்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. TVK மதுரை மாநாடு – … Read more

“திமுகவை இன்று ஆதரிக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஏனென்றால்'' – அமீர் விளக்கம்

திரைப்பட இயக்குநர் அமீர் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “இவர்கள் எல்லாம் திமுக ஆதரவாளர்கள். திமுகவை எதிர்த்து பேசவே மாட்டார்கள் என்று என்னை சொல்வார்கள். ஒரு திரைப்பட இயக்குநராக அறியப்பட்ட நான் திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கே வந்தேன். ஆணவக் கொலை அன்று எதிர்க்க வேண்டிய தேவையும் இருந்தது. அதேபோல, இன்று ஆதரிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. அதற்கு காரணம் பாசிச, சனாதனக் கொள்கைகளை எதிர்த்து … Read more

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:  சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்போ எடுப்பது தவறா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாக, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொருவித தன்மைகள் இருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் தன்மை வேறு. வலி நிவாரணிகளின் தன்மை வேறு. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வோர் இடத்தில் … Read more

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது – விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்த ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சந்தோஷ் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றுடன் ஊருக்கு வந்தனர். குழந்தையின் … Read more

மதராஸி: “அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் field out ஆகிட்டால்'' – நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் நேற்று நடைபெற்றது. மதராஸி இந்நிகழ்ச்சியில் அனிருத் பற்றி பேசிய சிவகார்த்திகேயன், “நானும் அனிருத் சாரும் 8 படங்கள் பண்ணியிருக்கோம். அவர் எனக்கு நண்பருக்கும் மேலானவர். அவர் field out ஆகிட்டால் என்னுடைய வெற்றி வச்சு சந்தோஷப்படுவேன்னு சொன்னாரு. கிடையவே கிடையாது! அனிருத் அவர் எப்போ கல்யாணம் பண்ணிப்பார்-னு … Read more