BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" – திவ்யாவைக் கடுமையாகச் சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. BB Tamil 9: “எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா”- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்கிறார். “நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் … Read more

"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடில்லை" – மாரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், “30 ஆண்டுக்குப் பின்பு மணத்தி கணேசன் யார் என்பதை … Read more

"இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக மும்பை மாடல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”தியாகிகளின் தியாகங்களால் நாம் மும்பையைப் பெற்றோம். ஆனால் நம் கண் முன்னே, அது இரண்டு குஜராத்தி நபர்களால் விழுங்கப்படப் … Read more

தேனியில் மலை போல் சேரும் குப்பைகள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தேனி, அல்லிநகரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாகவே மாறி உள்ளது. அல்லிநகரத்திற்கு அருகில் பாரஸ்ட் ரோட் பகுதியில் ஒரு சிறிய குன்று உள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகள் எல்லாம் அந்த குன்றின் அடிவாரத்தில் கொட்டுகின்றனர். நகராட்சியினர் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சுத்தம் செய்யாததால் சுமார் 100 மீட்டர் தொலைவு வரை குப்பைகள் பரவி கிடக்கிறது. இதனால் அந்த குன்று தற்போது குப்பை மலை போல் … Read more

`மலையில் தஞ்சம்' – பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக தென்காசிக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை … Read more

இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! – என்ன நடந்தது?

பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தான் வீரர் பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார். அவர் இந்திய … Read more

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “பாஜக – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன” … Read more

'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' – 'சிறை' படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறை படத்தில்… ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ‘சிறை’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான … Read more