தேனியில் மலை போல் சேரும் குப்பைகள்! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

தேனி, அல்லிநகரம் அருகே உள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கமாகவே மாறி உள்ளது. அல்லிநகரத்திற்கு அருகில் பாரஸ்ட் ரோட் பகுதியில் ஒரு சிறிய குன்று உள்ளது, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குப்பைகள் எல்லாம் அந்த குன்றின் அடிவாரத்தில் கொட்டுகின்றனர். நகராட்சியினர் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை சுத்தம் செய்யாததால் சுமார் 100 மீட்டர் தொலைவு வரை குப்பைகள் பரவி கிடக்கிறது. இதனால் அந்த குன்று தற்போது குப்பை மலை போல் … Read more

`மலையில் தஞ்சம்' – பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது

தமிழகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட கொடூர குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் பகுதியில் வைத்து தென்காசி மாவட்ட தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக தென்காசிக்கு கொண்டு வரப்பட்ட பாலமுருகனை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மீது நெல்லை, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை … Read more

இந்தியா பெயர் கொண்ட அணியில் ஆடிய கபடி வீரருக்கு பாகிஸ்தான் தடை! – என்ன நடந்தது?

பஹ்ரைனில் தனியார் போட்டியில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை காலவரையின்றி தடைசெய்து பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு உத்தரவிட்டிருக்கிறது. பாகிஸ்தான் வீரர் பஹ்ரைனில் ‘ஜிசிசி கோப்பை’ (GCC Cup) என்ற பெயரில் தனியார் கபடி தொடர் (டிச.16)நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளின் பெயரில் தனியார் அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒரு அணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த அணிக்காக பாகிஸ்தான் வீரர் உபைதுல்லா ராஜ்புத் களமிறங்கினார். அவர் இந்திய … Read more

காங்கிரஸ்: திக்விஜய் சிங் சொன்ன `அந்த' வார்த்தை; கொந்தளிக்கும் தலைவர்கள்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வைப் புகழ்ந்து பேசியது, காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை மற்றும் மூத்த தலைவர்களிடையே நிலவும் அதிருப்தி பேசுபொருளாகியிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு அருகில் தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “பாஜக – ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அடிமட்டத் தொண்டர்களை முதலமைச்சர் மற்றும் பிரதமர் போன்ற உயர் பதவிகளுக்கு வளர அனுமதிக்கின்றன” … Read more

'நிறைவான படம், திரையரங்குகள் நிறையட்டும்!' – 'சிறை' படத்துக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் அக்ஷய் நடித்த ‘சிறை’ திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிறை படத்தில்… ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ‘சிறை’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிறை பார்த்தேன். மனம் அவ்வளவு நிறைவாக இருக்கிறது. எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான … Read more

அன்புமணி பின்னால் விவரமறியாமல் சென்றவர்கள் திரும்புவார்கள்! – ஜி.கே.மணி அதிரடி

சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு கூட்டம் நாளை ( டிச. 29) நடைபெறவுள்ளது. ராமதாஸ் இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பா.ம.க கெளரவ தலைவர் ஜி.கே. மணி, ‘அன்புமணியை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கியிருக்கிறார். அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் வலிமையான மற்றும் தவிர்க்க முடியாத கட்சியாகவும் இருந்த பாமகவை திட்டமிட்டு, சூழ்ச்சியால், அபகரிப்பதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அன்புமணி மேற்கொண்ட நடவடிக்கையால், ராமதாஸ் மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அடைந்தார். அன்புமணியின் தூண்டுதலால், … Read more

"100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?" – கனிமொழி கேள்வி!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கனிமொழி தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமை வகிக்க, கனிமொழி எம்.பி, அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் … Read more

விஜயகாந்த்: 2-ம் ஆண்டு நினைவுநாள்; தலைவர்களின் நினைவுக் குறிப்புகள்!

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தே.மு.தி.க-வினர் குருபூஜையாக இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். தேமுதிக தொண்டர்கள் இருமுடி சுமந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல் கோடம்பாக்கத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பி-ரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ வேலு உள்ளிட்டோரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். மரியாதை செலுத்தும் உதயநிதி ஸ்டாலின் அதைத் … Read more