Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்!

அறிவு மற்றும் தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்தாலும், அதில் சில ஆபத்துக்களும் உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் உக்ரைனில் நடந்த சைபர் தாக்குதல். ஹேக்கர்கள் உக்ரைனின் கணினி நெட்வொர்க் அமைப்பிற்குள் நுழைந்து வங்கியியல் முதல் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளைத் ஸ்தம்பிக்க செய்துள்ளனர். இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஹேக்கர்கள் அல்லது ரஷ்யாவின் சைபர் ராணுவம் இருப்பதாக ஊகிக்கப்பட்டது. இருப்பினும் உக்ரைனில் நடந்த சைபர் மோதலில் எந்த தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. … Read more

அதிர்ச்சி சம்பவம்! இரு ஆண்டுகள் மாயமான சிறுமி; வீட்டு படிக்கட்டின் கீழ் கண்டுபிடிப்பு

நியூயார்க்: இரண்டு ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த சிறுமி, அவரது வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் உள்ள ரகசிய அறையில் கண்டுபிடிக்கப்பட்ட சமப்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை தங்களிடம் இருக்க வேண்டும் என்ற பெற்றோர் கோரி வந்த நிலையில், அதற்கு அனுமதி கிடைக்காததால், தங்கள் நான்கு வயது சிறுமியை கடத்திச் சென்று இரண்டு ஆண்டுகளாக ஒரு ரகசிய மறைவிடத்தில் மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகிறது. பெண் குழந்தைக்கு இப்போது 6 வயது. கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி காணாமல் … Read more

Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றம் இருந்து வரும் சூழ்நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் பதற்றம் நிலவுகிறது.  உக்ரைன் – ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழ்நிலை நிலவியது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது ரஷ்யா … Read more

Death Lake: உலகின் மர்மமான ஏரி! இந்த ஏரியின் நீர் உயிரைக் குடிக்கும்!!

இந்த பூமி பல மர்மங்களைக் கொண்டுள்ளது. மலைகள், ஆறுகள், ஏரிகள் என இயற்கை தன்னுள் பல ரகசியங்களை பொதித்து வைத்துள்ளது.  மனிதர்களால் அறிய முடியாத பல விஷயங்கள் உள்ளன.  இருப்பினும், மனிதர்களின் விடா முயற்சி, இந்த மர்மங்களின் முடிச்சுக்களை அவிழ்க்க விளைகிறது.  அவற்றில் சில வெற்றியடைந்தாலும், பெரும்பாலும் ரகசியங்கள் மர்மமாகவே தொடர்கின்றன. அப்படி மர்மமாய் தொடரும் ஒரு ஏரி தென்னாப்பிரிக்காவின் ஃபுண்டுஜி.  பார்ப்பதற்கு பேரழகாய் காட்சியளிக்கும் இந்த ஏரியை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில் தனது … Read more

HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்; சாத்தியமாக்கிய எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

வாஷிங்டன்: HIV என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழிக்கும் நோய் (Human Immuno Deficiency Virus), மிகவும் கொடிய வைரஸ் ஆகும். இந்த தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில், இது இதுவரை குணப்படுத்த முடியாததாக கருதப்பட்டது. ஆனால் விஞ்ஞானிகள் இந்த வகையில்  பெரும் வெற்றியை அடைந்துள்ளனர். ஸ்டெம்செல் அறுவை சிகிக்சை மூலம்  இது சாத்தியம் ஆகியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்து, HIV தொற்றில் இருந்து குணமடைந்த … Read more

Bizarre World: விந்தையுலகம்! சுவற்றிலும் ஆண்குறி! நாற்காலியிலும் ஆணுறுப்பு

உலகம் விந்தையானது. உலகின் ஓரிடத்தில் புனிதமாக கருதப்படுவது வேறொரு இடத்தில் கலையாக பார்க்கப்படுகிறது.  உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல விஷயங்களில் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. சில நாடுகளில் புழக்கத்திலும் வழக்கத்திலும் உள்ளது பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.   சில நாடுகளில், சுவர்களில் ஆண்குறியின் படங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டால், சில ஊர்களில் அப்படி இருப்பது அவமதிப்பாக கருதப்படுகிறது. பூட்டானில் உள்ள ஃபல்லஸ் ஓவியம் – உலகெங்கிலும் உள்ள பூட்டானிய வீடுகளில் நிமிர்ந்த லிங்கத்தின் ஓவியத்தை நீங்கள் காணலாம். இது ஃபாலஸ் பெயிண்டிங் … Read more

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்; ரஷ்யாவை மீண்டும் எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை தவிர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், உலகத்தின் பார்வை முழுவதும் இப்போது ரஷ்யா-உக்ரைன் மீது தான் உள்ளது. இரு நாடுகளும் இடையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.   ரஷ்ய படைகள் இன்று தாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) அறிவித்துள்ளார். ரஷ்யா  உக்ரைன் எல்லையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும், உக்ரைன் எல்லையில் இருந்து 110 கி.மீ., தொலைவில் கூடாரம் போட்டு, … Read more

DDoS: உக்ரைனில் சைபர் தாக்குதல்! DDoS தாக்குதலால் இணையதளங்கள் முடக்கம்

கியேவ்: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், முக்கிய வங்கிகள் மற்றும் ராணுவம் மீது செவ்வாய்கிழமையன்று சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உக்ரைன் நாட்டு அதிகாரிகள் இந்தத் தகவலை தெரிவித்தனர்.  உக்ரைனில் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் கலாச்சார அமைச்சகங்களின் இணையதளங்கள் உட்பட குறைந்தது 10 இணையதளங்களை முடங்கிப் போவதற்குக் காரணமானது DDoS தாக்குதல். இவற்றைத் தவிர இரண்டு பெரிய பொதுத்துறை வங்கிகளின் இணையதளங்களும் பாதிக்கப்பட்டன. Сайт МОУ зазнав, ймовірно, DDoS-атаки: фіксувалася надмірна кількість … Read more

கொரோனாவே இன்னும் போகவில்லை; அதற்குள் 'லஸ்ஸா' காய்ச்சல்; அச்சத்தில் உலகம்!

இந்தியா உட்பட உலகில் கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் முடிவடையாத நிலையில் காய்ச்சல் தொடர்பான புதிய நோய் பரவல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  கொரோனாவில்  தொற்று குறைந்து வரும் நிலையில் வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையில் புதிதாக மற்றொரு கய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது, இது லாசா காய்ச்சல் அல்லது லாசா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதால் இந்த நோய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஸ்ஸா காய்ச்சலின் இறப்பு … Read more

Sexual Abuse settlement: இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசத்தை எட்டியது

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுத்திருந்த வர்ஜீனியா கியூஃப்ரே சமரசம் செய்து கொண்டார். இதுதொடரபாக கியூஃப்ரேவின் வழக்கறிஞர் டேவிட் பாய்ஸ், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள், கொள்கையளவில் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். சட்ட நடைமுறைகளை முறைப்படி மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக  டேவிட் பாய்ஸ் (Attorney David Boies) நீதிமன்றத்தில் தெரிவித்தார். சமரச ஒப்பந்தத்தின் … Read more