மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: தங்க பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்…!
உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.