இறந்த மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தை! பேத்தியை மகளாக்கிக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

குழந்தை இல்லாத பலர் தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற தத்து எடுப்பது வழக்கம்.  அதே போல் தான் ஸ்பானிஷ் நடிகை ஒருவரும் தத்து எடுத்துக் கொண்டார். ஆனால், நீங்கள் நினைப்பது போல் யாரோ ஒருவரது குழந்தையை அல்ல… அவர் இறந்து போன தனது மகனின் விந்தணு மூலம் பிறந்த குழந்தையை தத்து எடுத்துள்ளார். மனதை நெகிழ வைக்கும் ஒரு சம்பவமாக, 68 வயதான ஸ்பானிய தொலைக்காட்சி நடிகையான அனா ஒப்ரெகன், அனா சாண்ட்ரா என்ற ஒரு வார வயது … Read more

தளபதி 68 படத்தின் இயக்குனர் இவரா? மாஸ் அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்!

ராஜா ராணி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து அடுத்தடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற படங்களை இயக்கினார்.  அட்லீ-விஜய் கூட்டணியில் தமிழில் வெளியான படங்களுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விஜய் சேதுபதி, ப்ரியாமணி மற்றும் யோகி பாபு போன்ற பல நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more

பிட் படம் ரிலீஸ் செய்தவர் அண்ணாமலை! விளாசிய காயத்திரி ரகுராம்!

தமிழக பாஜவின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் காயத்திரி ரகுராம். பாஜகவில் இருந்த சமயத்தில் திமுகவை பல வகைகளில் விமர்சனம் செய்து வந்தார்.  பின்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்பு பாஜகவில் இருந்து விலகினார்.  பாஜகவில் இருந்து விலகிய பின்பு அண்ணாமலை மற்றும் தமிழக பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் காயத்திரி ரகுராம்.  பாஜக சார்பிலும் காயத்திரி ரகுராமை விமர்சனம் செய்து வந்தனர்.  இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை, சினிமா பட ரிலீஸ் … Read more

பள்ளி மாணவர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிவித்த முக ஸ்டாலின்!

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெறும் அரசு விழாவில் “அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். (IITM)” திட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.  மேலும் “கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப் பெறுவார்கள்” என்பதில் சந்தேகமில்லை.  அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் மாறி வருவது பெருமைக்குரியது என்றும் … Read more

$3.5 மில்லியன் செலவில் கொலம்பியாவிலிருந்து இந்தியா வரும் 60 நீர்யானைகள்!

கொலம்பியா 70 ‘கோகைன் நீர்யானை’களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நீர்யானைகள் போதைப்பொருள் கடத்தல்காரர் பாப்லோ எஸ்கோபரின் தனியார் மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டுள்ள விலங்குகளில் அடங்கும். இந்த காரணத்திற்காக அவை கோகோயின் ஹிப்போஸ் என்று அழைக்கப்படுகின்றன. அவர்களை இடமாற்றம் செய்ய $3.5 மில்லியன் செலவாகும். கொலம்பிய விவசாய நிறுவனம், கொலம்பிய விமானப்படை மற்றும் மெக்சிகோவில் உள்ள ஆஸ்டாக் ரிசர்வ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் உள்ளூர் ஆண்டியோகுவியா அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. … Read more

ரஜினியின் தர்பார் படம் தோல்வியடைந்தது ஏன்? ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது கடைசிப் படமான ‘தர்பார்’ படத்தை தொடர்ந்து எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.  சமீபத்தில் திரிஷா நடிப்பில் வெளியான ‘ராங்கி’ படத்தை தயாரித்திருந்தார், அடுத்ததாக அவரது தயாரிப்பில் ‘ஆகஸ்ட் 16, 1947’ படம் ஏப்ரல் 7 அன்று வெளியாகிறது.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படமும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படமும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவராமல் தோல்வியை தழுவிய நிலையில் இந்த இரண்டு படங்களின் தோல்விக்கான … Read more

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000… புதிய அறிவிப்பு – யாருக்கு எப்படி கிடைக்கும்?

Tamil Nadu School Students Monthly Scholarship: சென்னை ஐஐடி வளாகத்தில் ‘அனைவருக்கும் ஐஐடிஎம் திட்டத்தில் 250  அரசு பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து  கொண்டு வழங்கினார். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு’ திட்டம் குறித்த அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், இந்த புதிய திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்பு பயிலும் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் 11, 12ஆம் … Read more

cocaine: மும்பை விமானநிலையத்தில் போதை மருந்து கடத்தல் திட்டம் முறியடிப்பு

மும்பை: வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (Directorate of Revenue Intelligence) புதன்கிழமை மும்பையில் 1970 கிராம் கோகோயின் கைப்பற்றியது மற்றும் இது தொடர்பாக ஆப்பிரிக்க நாட்டவர் உட்பட மூன்று பேரை கைது செய்தது. “டிஆர்ஐ மூலம் சேகரிக்கப்பட்ட உளவுத்துறையின் அடிப்படையில், ஏப்ரல் 4 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அடிஸ் அபாபாவிலிருந்து மும்பைக்கு வந்த ஒரு ஆண் பயணி (35) தடுத்து வைக்கப்பட்டார். பயணிகளின் சாமான்களை ஆய்வு செய்ததில் 1970 கிராம் … Read more

கொரோனா தொற்றுக்கு கோவை பெண் உயிரிழப்பு…

Tamil Nadu Covid Update: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், திரையரங்கம், பஸ், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று … Read more

அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் சீனா! டிராகனை எச்சரிக்கும் அமெரிக்கா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டியுள்ள சீனா, அருணாச்சல பிர்சேதத்தை உரிமை கோரும் வம்பை மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தை, தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி எனவும், அதில் தங்களுக்கு உரிமை உள்ளது என மீண்டும் சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது. அருணாச்சல பிரதேச விவகாரம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, இதை ‘தெற்கு திபெத்’ என அழைக்கிறது. அவ்வப்போது அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் … Read more