ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளமா?

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா: தி ரைஸ், மிஷன் மஜ்னு போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று.  26 வயதாகும் இந்த பான் இந்திய நடிகை தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறி, பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் மாறிவிட்டார்.  இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘குட்பை’ எனும் படத்தில் நடித்து தனது பாலிவுட் திரையுலகில் தனது இன்னிங்க்ஸை தொடங்கினார்.  … Read more

நிலக்கரி சுரங்க திட்டத்தை தடுத்து நிறுத்த வதற்கான நடவடிக்கைகளை தேவை- எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் மத்திய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களுக்கான அறிவிப்பை அடுத்து, தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் இன்று தமிழக சட்டசபையிலும் ஒலித்தது. இதனையடுத்து மத்திய அரசின் அறிவிப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசினார். இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இது … Read more

தாயின் உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பாதுகாத்து வந்த நபர்!

தாய் இறந்த உடல்: ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடலை நீண்ட நேரம் வெளியில் வைக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள், அதன் பிறகு இறந்த உடலை வைக்க வேண்டும் என்றால், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்க வேண்டும். அதையும் தாண்டு மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் வைக்க வேண்டூம் என்றால், அது பதப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், நினைத்து பார்க்கவே முடியாத ஒரு அதிர்ச்சியான செயலை ஒரு நபர்  செய்துள்ளார். இந்த … Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்!

தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனை பொருட்களை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.  சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் ( டாம்ப்கால்) தயாரித்துள்ள ஆறு அழகு சாதனை பொருட்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகப்படுத்தி வைத்தார்.  இயற்கை பொருட்கள் கொண்டு … Read more

செல்லூர் ராஜூ வைத்த கோரிக்கை! மழுப்பலாக பதிலளித்த அமைச்சர் பொன்முடி!

இன்றைய சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரத்தில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.  அப்போது பேசிய அவர், “மதுரை மேற்கு தொகுதியில் ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. மதுரை மாநகரிலே ஒரே ஒரு அரசு கல்லூரி 1962ல் தொடங்கப்பட்டது தான். அதற்குப் பிறகு தொடங்கவில்லை அதுவும் மகளிர் கல்லூரி மட்டுமே உள்ளது. மற்ற எல்லாம் தனியார் கல்லூரியாக தான் உள்ளது.  மாநகராட்சி பகுதியில் எந்த கல்லூரியும் இல்லாமல் உள்ளது. என்னுடைய … Read more

டிரம்பின் தலை மேல் தொங்கும் கத்தி…. மீண்டும் அதிபர் கனவு நனவாகுமா!

வாஷிங்டன்: கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், முதன்முறையாக நியூயார்க் நீதிபதி முன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்துள்ளார். இதில், மூன்று வழக்குகள் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பானவை. குறிப்பாக 2016 அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆபாச நட்சத்திரம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் டிரம்பை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்றத்திற்குள் நுழையும் முன் டிரம்ப் பொதுமக்களை … Read more

தளபதி விஜய்க்காக முதல் ஆளாக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்!

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் ஒரு தீவிரமான விஜய் ரசிகை, இதனை பலமுறை அவர் பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.  விஜய்யின் தீவிரமான ரசிகையான இவர் அவருக்கு ஜோடியாகவே பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.  விஜய்யின் பிறந்தநாளுக்கு இவர் தனித்துவமாக ஓவியங்கள் மற்றும் இசை வடிவில் அவருக்கு பிறந்தநாள் பரிசுகளையும் கொடுத்துள்ளார்.  மேலும் தனது செயலின் மூலம் தான் எந்தளவுக்கு விஜய்யின் … Read more

தமிழகத்திலிருந்து காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல சிறப்பு ரயில்! இவ்வளவு கம்மி விலையிலா?

மத்திய  ரயில்வே தை சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணைந்து பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் சவுத் ஸ்டார் ரயில் வரும் மே 11ம் தேதி சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு 12 நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக புறப்படுகிறது.  கோவையில் இருந்து … Read more

10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள்… 4.8 கோடி நிலுவை வழக்குகள்… அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில், நாடு முழுவதும் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 1987-ம் ஆண்டு, சட்ட ஆணையம், வெளியிட்ட தகவலில் 10 லட்சம் பேருக்கு குறைந்தபட்சம் 50 நீதிபதிகள் தேவை என்று கூறியது. இருந்த போதிலும் தற்போது 10 லட்சம் பேருக்கு 19 நீதிபதிகள் என்ற விகிதம் உள்ளது.  இதன் காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 4.8 கோடியாக உள்ளது. செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) … Read more

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு இவ்வளவு படங்கள் ரிலீசா?

ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் தமிழ் படங்களின் பட்டியல்: ருத்ரன்:  எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘ருத்ரன்’ ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாசர் மற்றும் சச்சு ஆகியோர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல … Read more