Actor Innocent Passed Away: பழம்பெரும் மலையாள நடிகர் இன்னொசென்ட் காலமானார்!

Actor Innocent Passed Away: கொச்சியில் உள்ள லேக்ஷோர் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், “இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் எங்கள் கவனிப்பிலும் சிகிச்சையிலும் இருந்தார். கோவிட் தொடர்பான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவை அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன” என அவரது உயிரிழந்ததை உறுதிசெய்தது. புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகர் இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் மூச்சுத் … Read more

ஜாக்கிரதை… ஊறவைத்த அரிசை சாப்பிடக்கூடாது… 8 வயது சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (50).  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மனைவி பரமேஸ்வரி. மாரிசாமி – பரமேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி. இவர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிகிதா லட்சுமி (8), அங்குள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.   … Read more

அதிர்ச்சி! பள்ளியில் காண்டம், மதுபானம்… மாணவிகளின் வகுப்பு அருகே படுக்கையறை

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில், அதிபரின் அறையில் திடீர் சோதனையின் போது மதுபானம் மற்றும் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தின் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அப்பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த குழு பள்ளியில் படுக்கைகள், மதுபானம், ஆணுறைகள், முட்டைகள் அடுக்கும் தட்டுகள்  மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தது. “காஸ் சிலிண்டர் மற்றும் மது பாட்டில்கள் உட்பட பிற … Read more

மத வேறுபாடு இன்றி ஆலங்குடி சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக்கூடிய ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஶ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார்  700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலான இந்தக் கோவிலின் குடமுழுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நாளை விமர்சியாக நடைபெற உள்ளது. இங்கு சிறப்பு என்னவென்றால், இந்த குடமுழுக்கிற்கு ஆலங்குடி நகரில் உள்ள அனைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் … Read more

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி விழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

பங்குனிப் பெருவிழா: தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.  அங்கு முருகப் பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் பங்குனி … Read more

நீலகிரி: கட்டுகட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்! வருவாய்த்துறை அதிரடி சோதனை

நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காட்டேரி பூங்கா பகுதியில் வருவாய்த்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அதிக வாகனங்கள் ஊட்டி நோக்கிச் செல்லும் என்பதால் குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார் மற்றும் வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வருபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர்.  அப்போது, திருப்பூரில் இருந்து உதகை நோக்கி வந்த டாடா இண்டிகா காரை … Read more

வாழ்க்கையை புரட்டிப் போட்ட கொசுக்கடி! கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரிட்டனில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது. சில நேரங்களில் கொசுக் கடி காரணமாக ஏற்படும் நோய்களால், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த சம்பவத்திலும், ஒரு பெண் கொசுக்கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கோமா நிலைக்கும் சென்ற சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இறுதியில் அவரது கைகளையும் கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் … Read more

கொச்சி அருகே விபத்திற்குள்ளான கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்! 3 பேர் படுகாயம்!

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே கடலோர காவல் படை ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். கடலோர காவல்படை பயிற்சியில் விமானம் புறப்படும் போது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் ரன்வேயிலிருந்து . இச்சம்பவம் 12:30 மணியளவில் நேரிட்டது. இந்திய கடற்படை சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த சம்பவம் கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே நடந்துள்ளது. கொச்சி … Read more

காசியில் இளம் நடிகை தற்கொலை…? – படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபரீதம்!

போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகன்ஷா, 1997ஆம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரில் பிறந்தார். ‘மேரி ஜங் மேரா ஃபைஸ்லா’ படத்தின் மூலம் போஜ்புரி திரையுலகில் அகன்ஷா அறிமுகமானார். பிரபல போஜ்புரி நடிகையான அகன்ஷா துபேவின் வயது 25. இவர் வாரணாசி பனாரஸின் சாரநாத் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் சமூக ஊடகங்களிலும் பிரபலமானாவர். இவருக்கு … Read more

ராகுல் காந்தி மீது இன்னும் 10 அவதூறு வழக்கு இருக்கு… ஆனால் அவரு ஒரு வழக்கு கூட தொடரவில்லை

ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அவர் தண்டிக்கப்பட்டவுடன் எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அதானி தொடர்பாக ராகுல் … Read more