அதிமுக இப்படி செய்யலாமா? .. இனி தமிழகத்தில் அண்ணாமலை ஆட்சி தான் – அமர்பிரசாத் ரெட்டி வீர ஆவேசம்

தமிழக பாஜகவில் மாநில ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர், தான் ஏன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை ஒன்றையும் டிவிட்டரில் வெளியிட்டார். அதில், உண்மையாக உழைத்தேன், வேதனை மட்டும் தான் மிச்சம். தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும், கட்சியையும் செருப்பாக பயன்படுத்துகிறது. கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு … Read more

நடிகை அனிகா கண்ணீர்..! முன்னாள் காதலன் அடித்ததால் ஏற்பட்ட காயங்கள்..புகைப்படத்தை வெளியிட்டார்

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை அனிகா விக்ரமன், தன்னுடைய முன்னாள் காதலன் அனூப் பிள்ளை கடுமையாக துன்புறுத்தலுக்கு செய்ததாக தெரிவித்துள்ளார். அவர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக காயப்படுத்தியதாகவும், இப்போது அவரை விட்டு முழுமையாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் முன்னாள் காதலனால் ஏற்பட்ட காயங்களின் புகைப்படங்களையும் அனிகா விக்ரமன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் எழுதியிருக்கும் பதிவில், நான் அனூப் பிள்ளை என்பவரை காதலித்தேன். அவர் என்னை மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் … Read more

வடமாநிலத்தவர்கள் இல்லாததால் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

வடமாநிலத்தவர்கள் ஊருக்கு கிளம்புவதன் எதிரொலியால் ஒசூர் பகுதிகளில் மலர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.  வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் தொழிற்சாலைகள், விவசாயம்,கூலி என பல்வேறு வேலைகளில் அதிகமான வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது வதந்தி காரணமாக ஒசூர் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தவர்கள் அச்சத்தில் அவர்களும் … Read more

சேலம்: சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெறக்கோரி பிச்சை எடுத்து போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டது. 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே வீட்டு உபயோக சிலிண்டர்கள் 50 ரூபாயும், வணிக சிலிண்டர்களின் விலை 350 ரூபாயும் உயர்த்தப்பட்டன. இது அன்றாட வேலைக்கு செல்வோருக்கு கூடுதல் சுமையாகவும், டீக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு பேரிடியாகவும் அமைந்தது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த … Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி! Youtube பார்த்து பிரசவித்த பின் குழந்தையை கொன்ற கொடூரம்!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 15 வயது மைனர் ஒருவர் யூடியூப் பார்த்து  குழந்தையைப் பெற்றெடுத்தார், பின்னர் அந்த குழந்தையை கொன்று பெட்டியில் அடைத்தார். இது குறித்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். நாக்பூரின் அம்பாஜாரி பகுதியைச் சேர்ந்த சிறுமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது தாயிடம் கூறி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து, பிரசவம் குறித்த … Read more

8 வயதில் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் – மனம் திறந்த நடிகை குஷ்பூ!

பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பூ தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு தமிழில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.  தமிழ் மொழிபடங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார்.  தமிழ் சினிமாவில் பிரபு-குஷ்பூ ஜோடி பலராலும் ரசிக்கப்பட்டது, இந்த ஜோடி பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளது.  நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் சமீபத்தில் வெளியான அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார்.  திரைப்படங்களில் … Read more

காணாமல் போன 2 விநாயகர் கோவில்களை கண்டுபிடித்துக் தர கோரி விநாயகர் சிலை உடன் மனு!

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான பேருந்து நிலையம் ஆகும். இதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக இடித்து விட்டு, புதிதாக கட்டுவதற்காக ரூ.78.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பூமிக்கு அடியில் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு தளம், பஸ்கள் … Read more

கோவை: போலி வீடியோக்கள் குறித்து வட மாநில தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவின. இதனால், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து  ஆய்வு செய்ய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாட்டிற்கு வருகை தந்து சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் … Read more

வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் Tiger Nageswara Rao!

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.  வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். … Read more

மாசி மகத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

மாசி மகத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அணைக்கரை வடவார் தலைப்பில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு வந்த திரளான மக்கள் ஆடை மாற்ற இடம் இல்லாமல் அவதிப்பட்டனர். மறந்த திதியை மகத்தில் கொடுப்பது ஐதீகம். இதில் மாசி மாதம் வரும் மகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த மாசி மகத்தை முன்னிட்டு மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது அணைக்கரை. இங்கு அரியலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது.  ஆகையால் இந்த … Read more