டெல்லிக்கு பறக்கும் அண்ணாமலை…வரிசை கட்டும் புகார்கள்: மேலிடத்தின் பிளான் என்ன?

பாஜகவில் மோதல் தமிழக பாஜகவில் இப்போது நிலைமை சரியில்லை. அண்ணாமலைக்கு எதிராக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஒரு பெருங்கூட்டமே அணி திரண்டிருக்கிறது. வேவு பார்ப்பது, மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, கட்சி நடவடிக்கைகளில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது என்பது உள்ளிட்ட புகார்கள் அண்ணாமலை மீது வட்டமடிக்கின்றன. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. மாறாக, தனக்கு எதிராக கட்சிக்குள் இருப்பவர்களை அமைதியாக ஓரங்கட்டுவதில் பக்காவாக பிளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்ணாமலைக்கு எதிர்ப்பு இந்தநிலையில் தான் அண்ணாமலைக்கு … Read more

தமிழக பட்ஜெட் 2023: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் பிடிஆர் முன் இருக்கும் சவால்கள்..!

திமுக அரசின் வாக்குறுதி கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டம் குறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து பேசும்போது, தமிழக நிதிநிலைமை சரியான பின்னரே மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார். இது கடும் விமர்சனக்குள்ளானது. ஈரோடு இடைத்தேர்தலில் … Read more

இந்த 6 மலையாள திரில்லர் திரைப்படங்களை மறக்காம பாத்துருங்க!

மலையாள மொழிப் படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, மலையாள மொழியில் வெளியாகும் ரொமான்டிக் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு இருக்கின்றது.  அதிலும் குறிப்பாக த்ரில்லர் கதையம்சம் கொண்ட படங்களுக்கு அனைத்து மொழி ரசிகர்களுக்குமிடையே வரவேற்பு உள்ளது.  தற்போது நீங்கள் கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய 6 மலையாள திரைப்படங்களை பற்றி பார்ப்போம், இந்த படங்கள் ஓடிடி தலங்களிலேயே பார்த்து ரசிக்கலாம்.  இரட்டா / Iratta: ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் எழுதி இயக்கிய இந்த … Read more

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தவர்களுக்கு விருது!

சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டியின் மனிதாபிமான விருதுகள் (ஹூமானிடேரியன் அவார்ட்ஸ்) விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.  மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து, அவர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பான வாழ்விற்காகவும் சேவை ஆற்றி வரும் நபர்களுக்கு, 13 பிரிவுகளிலும், ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.  கல்வி மேம்பாட்டிற்கான  விருதை பூவிழி என்பருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். கார்கி … Read more

கை விரித்த உற்ற நண்பனான சவுதி அரேபியா… அதிர்ச்சியில் பாகிஸ்தான்…!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு கடன் தேவைப்படும்போதோ, நெருக்கடி ஏற்பட்டதோ அப்போதெல்லாம் சவுதி அரேபியாதான் முதலில் உதவும் நாடாக இருந்தது. ஆனால் இந்த முறை அது நடக்கவில்லை என்று தெரிகிறது. பாகிஸ்தானுக்கு வட்டியில்லா கடனை வழங்க சவுதி அரேபியா மறுத்துவிட்டது. இஸ்லாமிய நண்பரின் இந்த முடிவால் இஸ்லாமாபாத் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட பாகிஸ்தானுக்கு உதவ நட்பு நாடுகள் கூட தயாராக இல்லை என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். திவால் நிலையை … Read more

தமிழக பட்ஜெட் 2023: பிடிஆர் போட்ட பிளான் – ஸ்டாலின் மகிழ்ச்சி: வெளியாகப்போகும் அறிவிப்புகள்

தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதிகளாக கொடுத்த மகளிருக்கான உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இது தொடர்பாக பல கட்ட ஆலோசனைகளை நடத்தி, மதுரை மெட்ரோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு … Read more

கோலிவுட்டில் புதிய கூட்டணி! செல்வராகவன் படத்தில் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி?

ரேடியோ ஜாக்கியாக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது நடிகராக பல ரசிகர்களை கவர்ந்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி.  தனது முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். LKG படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வீட்ல விசேஷம்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது, இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைந்திருந்தது.  அதனைத்தொடர்ந்து வெளியான அதிரடி – த்ரில்லர் திரைப்படமான ‘ரன் பேபி ரன்’ ஆர்.ஜே.பாலாஜியின் நடிப்புத்திறனை மேம்படுத்தி காண்பித்தது.  இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி … Read more

ADMK: ஆண்மகனாக இருந்தால் இதை செய் எடப்பாடி – சவால் விட்ட வைத்தியலிங்கம்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இதனை தடுக்க ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை மீண்டும் நாடியிருக்கும் சூழலில், வைத்தியலிங்கம் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்திருப்பதுடன், ஆண்மகனாக இருந்தால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் பொது இடத்தில் வாக்கு பெட்டியை வைத்து வெற்றி பெற்று பார், நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவே முடியாது என சவால் விட்டுள்ளார்.  வைத்தியலிங்கம் பேச்சு    தஞ்சாவூரில் வடக்கு – தெற்கு … Read more

மர்மங்கள் நிறைந்த மினசோட்டா நதி! காணாமல் போகும் நதி நீர்!

மினசோட்டா நதி: மினசோட்டா ஆறு என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு நதி மற்றும் இது அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் இருப்பதால், அதன் பெயர் மினசோட்டா நதி. இது மிசிசிப்பி ஆற்றின் துணை நதி என்றும் அதன் நீளம் சுமார் 534 கிலோமீட்டர். இந்த நதியின் ஆதாரம் மினசோட்டாவில் உள்ள ஒரு ஏரி மற்றும் இந்த ஏரி பெரிய கல் ஏரி என்று அழைக்கப்படுகிறது. மினசோட்டா ஆறு நகரங்களுக்கு தெற்கே மிசிசிப்பியுடன் இணைகிறது. இந்த … Read more

ஷாக்! ஒரே போட்டோவில் பல ஆதார் அட்டைகள்… குவியும் போலிகள் – எப்படி நடக்கிறது மோசடி?

ஒரு வங்கி மோசடி குறித்து, குற்றவாளிகளிடம் விசாரிக்கும்போது ஆதார் அமைப்பில் பல ஓட்டைகள் இருப்பதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு தனிநபருக்கும் ஆதார் அடையாளத்தை உருவாக்கும் போது முக பயோமெட்ரிக்ஸ் பொருத்தத்தை ஆதார் அமைப்பு மேற்கொள்ளவில்லை என்பதை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து ஆதார் ஆணையத்திற்கு டெல்லி காவல்துறை எழுதியுள்ள குறிப்பில்,”அனைத்து ஆதார் அட்டைகளிலும் உள்ள புகைப்படங்கள் ஒரே நபருடையதாக இருந்தாலும், வெவ்வேறு நபர்களின் பெயரில் ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. வங்கியில் அவர்களின் பெயர்களை ஆதார் தரவுத்தளத்தில் … Read more