நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

நியூடெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது பதவி தகுதிநீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ”நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” என்று … Read more

பாசிச நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் – முதல்வர் அழைப்பு

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் லோக்சபா உறுப்பினர் பதவி இன்று (வெள்ளிக்கிழமை) பறிக்கப்பட்டது. அவர் மீதான அவதூறு வழக்கில் சூரத் மாவட்ட நீதிமன்றம் நேற்று வியாழன் அன்று இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ராகுல் காந்தி எதிரான பாசிச நடவடிக்கைக்கு தினது கடுமையான கண்டனத்தை தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், … Read more

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

நியூடெல்லி: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க காங்கிரஸ் தனது சட்டப்போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த நடவடிக்கை பாஜகவின் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். அதானி விவகாரம் வெளியானதில் இருந்து அந்த குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் … Read more

குமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் பேராதரவினை பெற்றவர் ராகுல்காந்தி: KS.அழகிரி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ஆகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019 ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது. கோலார் பொதுக் கூட்டத்தில் பேசியதற்கு சூரத் … Read more

ராகுல்காந்தியை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை! வைகோ கண்டனம்!

மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும். இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல்காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற … Read more

'ராகுல் காந்தி தான் பாஜகவின் பிராண்ட் அம்பாசிடர்': அண்ணாமலை பேட்டி

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு,  ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி பதவி பறிபோனது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு … Read more

நாட்டாமை… தீர்ப்பை மாத்தி சொல்லு! ராகுல் காந்தியின் பதவி பறிப்பும் சட்ட விளக்கமும்!

நியூடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதாவது, தண்டனை காலமான இரண்டு ஆண்டுகள் மற்றும் அதற்குப் பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் எட்டு ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது.  ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் இரண்டாண்டு கால தண்டனை விதிக்கப்பட்டதால்,  காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. நீதிமன்ற … Read more

தாலிபான் அமைச்சரவை கூட்டத்தில் சண்டை! அமைச்சரின் கையை உடைத்த தேர்வு வாரிய தலைவர்!

ஆப்கானிஸ்தானில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகையாளர் பிலால் சர்வாரி, தலிபான் அமைச்சரவைக் கூட்டங்களில் கைகலப்புகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். பிலால் சர்வாரி தனது ட்வீட்டில், “தாலிபானின் MoHE ஷேக் நெய்டா மற்றும்  தேர்வு வாரியத் தலைவர் ஷேக் பாக்கி ஹக்கானி ஆகியோர் வாரியத் தேர்வுத் தாள்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக சர்ச்சையில் ஈடுபட்டனர். ஷேக் பாக்கி ஹக்கானியிடம் … Read more

கதாநாயகியாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி!

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார்.  ‘படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு … Read more

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! RT-PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன

Increasing Coronavirus Cases In Tamil Nadu: இந்தியாவில் திடீரென மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓமிக்ரான் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் 4% சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 100 கடந்தது. தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைந்திருந்தது.  இதனால் தீவிர காய்ச்சல் பாதிப்பு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்கள் … Read more