Znews Tamil
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், புதிய விதி நாடு முழுவதும் அமல்
ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டின் கீழ் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஒருபுறம், அரசு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை டிசம்பர் வரை நீட்டித்தது. மறுபுறம் மோடி அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் (One Nation One Ration Card) திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் அமல் செய்யப்பட்ட பிறகு அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் … Read more
இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்கள்!
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல‘ மற்றும் சூரி நடிப்பில் ‘விடுதலை’ போன்ற இரண்டு பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதுதவிர இந்த மாதத்தில் மற்ற சில படங்களும் வெளியாகியுள்ளது, அவை இப்போது இந்த வார இறுதியில் ஓடிடி தளங்களில் காண கிடைக்கிறது. இப்போது ஓடிடி-யில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியலை பார்ப்போம். பகீரா: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ஒரு உளவியல் காதல் திரில்லர் படம் தான் ‘பகீரா’. இப்படத்தில் பிரபுதேவா, அமைரா … Read more
இசையை ஒலிபரப்பியதற்காக பெண்கள் நடத்தும் வானொலி நிலையத்தை மூடிய தாலிபான்!
ஜலாலாபாத் (ஆப்கானிஸ்தான்): புனித ரமலான் மாதத்தில் இசையை ஒலிபரப்பு செய்தததற்காக ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டுள்ளது என்று தாலிபான் அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். தாரியில் பெண்களின் குரல் என்று பொருள்படும் சதாய் பனோவன், ஆப்கானிஸ்தானின் ஒரே பெண்களால் நடத்தப்படும் நிலையம் மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் எட்டு ஊழியர்கள், ஆறு பேர் பெண்கள். படாக்ஷான் மாகாணத்தில் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் மொய்சுதீன் அஹ்மதி கூறுகையில், “இஸ்லாமிய அரசின் … Read more
மத்திய அரசால் தமிழ்நாட்டில் தடுப்பூசி இல்லை… சொன்னது அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Covid Vaccines In Tamil Nadu: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கொரானோ நோய் பரவுதல் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயமாக்கபட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்த அமைச்சர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பொதுப்பிரிவு போன்ற பகுதிகளிலும் ஆய்வு நடத்தி முகக்கவசம் அணியாதவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். தனியார் … Read more
விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா… ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை – முழு விவரம்!
Viral Video: சென்னை ரோகிணி திரையரங்கத்தில் நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தின் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ‘விடுதலை’ படம் பார்க்க 7 வயது குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்டோருக்கு அனுமதியில்லாத ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற விடுதலை படத்தை, குழந்தைகளுடன் பார்த்த ரசிகரிடம், திரையரங்க நிர்வாகம் … Read more
கொல்கத்தாவில் முதியவரை பாதித்த தாவர பூஞ்சை நோய் – உலகிலேயே முதல் பாதிப்பு
கொல்கத்தாவில் வசிக்கும் நபர் ஒருவருக்கு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மைகாலஜிஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் தாவரங்களின் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர்தான். இந்த நபர் 61 வயதுடையவர். ஒரு தாவர மைக்கோலஜிஸ்ட் ஆவார். இந்த நபர் நீண்ட கால அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் பூஞ்சைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இவரைப் போல் தாவர செடிகளில் வேலை செய்பவர்கள் யாரும் இதற்கு முன் தாவர பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டதில்லை. இப்போது தான் இந்த … Read more
Agniveer Job: அக்னிவீர் திட்டத்திற்கு அலைமோதும் இளைஞர்கள்… 1 இடத்திற்கு 50 பேர் போட்டி!
Awarness On Agniveer Job: இந்திய கடற்படை மற்றும் அக்னிவீர் திட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படை அதிகாரிகள், வீரர்கள் ஐந்து குழுக்களாக கொல்கத்தா முதல் ஆந்திரா, தமிழ்நாடு வழியாக குஜராத் வரை கடற்கரைகளை ஒட்டி காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை 1770 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டுள்ள 36 பேர் கொண்ட குழு சென்னை அடையார் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்திற்கு இன்று (ஏப். … Read more
ஆனந்தத்தில் அரசு ஊழியர்கள்… அகவிலைப்படி உயர்வை அறிவித்த மாநில அரசு!
DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தது. மேலும், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி முடிவு … Read more
மேட்டுப்பாளையம் – உதகை கோடை கால சிறப்பு மலை ரயில் எப்போது?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்த மலை ரயில் பாதை அடர் வனப்பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ள நிலையில் இந்த ரயிலில் பயணம் செய்து அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும் வன உயிரினங்கள் என இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து பயணித்து வருகின்றனர். இருப்பினும் இந்த மலை ரயிலில் மூன்று பெட்டிகள் … Read more