அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் சீனா! டிராகனை எச்சரிக்கும் அமெரிக்கா

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை மாற்றி, புதிய பெயர்களை சூட்டியுள்ள சீனா, அருணாச்சல பிர்சேதத்தை உரிமை கோரும் வம்பை மீண்டும் தொடங்கிவிட்டது. இந்தியாவில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தை, தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி எனவும், அதில் தங்களுக்கு உரிமை உள்ளது என மீண்டும் சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது. அருணாச்சல பிரதேச விவகாரம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடும் சீனா, இதை ‘தெற்கு திபெத்’ என அழைக்கிறது. அவ்வப்போது அருணாசலப் பிரதேசத்தில் அத்துமீறும் … Read more

Pushpa 2 Update: புஷ்பா 2 எப்போது…? அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு சர்ப்பரைஸ் அப்டேட்!

Pushpa 2 Update: தெலுங்கு திரையுலகில் இருந்து பான் இந்தியா படமாக வெளியாகி, உலகம் முழுவதும் வசூல் ரீதியாக பெரும் ஹிட் அடித்த திரைப்படம்தான் ‘புஷ்பா’. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி வெளியான இப்படத்தை மொழி கடந்து, நாடு கடந்து பலரும் கொண்டாடி தீர்த்தனர்.  தெலுங்கு திரைப்பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. மேலும், இப்படத்தின் பாடல்களும், வசனங்களும் உலக அளவில் … Read more

Thalaivar 171: கமல் தயாரிப்பில் ரஜினி… விக்ரம் வரிசையில் அடுத்த சம்பவம்… லோகேஷ் ஸ்கெட்ச்!

Rajini Lokesh Kanagaraj Movie: தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க இயலா இயக்குநராக லோகேஷ் கனகராஜ் வளர்ந்துவிட்டார். மாநகரம் படத்தின் மூலம் பலரின் கவனத்தையும் கவர்ந்த அவர், கைதி திரைப்படத்தில் அவரின் திரைமொழியால் அனைவரையும் ரசிக சிறையில் அடைத்தார். தொடர்ந்து, அடுத்த படமே விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தை எடுத்து, இளைஞர்கள் மத்தியிலும் மாஸாக உயர்ந்தார்.  இவை அனைத்திற்கும் உச்சகட்டமாக, கமல்ஹாசனை வைத்து கடந்தாண்டு வெளியிட்ட விக்ரம் படத்தின் மூலம், சின்ன குழந்தை முதல் வயதான முதியவர் … Read more

கேரளா அட்டப்பாடி ’மது’ ஆணவக் கொலை வழக்கு தீர்ப்பு ! 13 குற்றவாளிகளுக்கு ஏழாண்டு சிறை

பாலக்காடு: அட்டப்பாடி மது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முனீர் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 16 பேரில் அனிஷ் மற்றும் அப்துல் கரீம் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு அபராதம் முதல் குற்றவாளியான ஹுசைனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1,05,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மீதமுள்ள 12 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் … Read more

Book Review: கடல்சார் தொல் வாழ்வியலைத் தேடும் “யாத்திரை” -எழுத்தாளர் ஆர்என் ஜோ டி குருஸ்

Writter RN Joe D Cruz: எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ் கடலோடியாக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் கடல்சார் வாழ்வியலைப் பதிவு செய்த எழுத்தாளர்களான ப.சிங்காரம், வண்ணநிலவன், ஹெப்சிபா யேசுதாசன், ராஜம் கிருஷ்ணன் போன்ற இன்னும் பிற எழுத்துலக ஆளுமைகளில் இருந்து தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் சங்க காலம் தொட்டுச் சுமார் … Read more

5 இளம் அர்ச்சகர்கள் பலி! குவிந்த போலீஸ்… முதலமைச்சர் இரங்கல் – என்ன நடந்தது?

Chennai Nanganallur Five Priest Died: சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள மூவரசன்பேட்டையில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் பல்லாக்கு தூக்கிக் கொண்டு ஊர்வலமாக சென்ற அர்ச்சகர்களாக பணிபுரியும் இளைஞர்கள், பங்குனி உத்தர தீர்த்தவாரி நிகழ்வையொட்டி, கோயில் அருகே உள்ள குளத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, இளைஞர்கள் குளத்தில் இறங்கியபோது, 2 பேர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிகளுக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த அருகில் இருந்த மூவரும் தண்ணீரில் மூழ்கிய, இருவரை காப்பாற்ற … Read more

திருமண பரிசில் வெடிகுண்டு! பெண்ணின் முன்னாள் ஆண் நண்பரால் மாப்பிள்ளை பலி! நடந்தது என்ன?

Chhattisgarh Crime News: சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்யாமல், வேறொருவரை திருமணம் செய்ததால், முன்னாள் ஆண் நண்பர் திருமணத்துக்கு கிப்ட்டில் பாம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம். சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகனும், அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர். அதோடு ஒரு குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் … Read more

'காவிரிப் படுகையில் நிலக்கரி எடுக்க ஏலம்' போராட்டங்கள் எரிமலையாக வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை

Coal Blocks In Cauvery Delta: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசின் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டங்களை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முயற்ச்சித்தால், கடும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசின் காவிரிப் படுகையில் நிலக்கரி ஏலம் குறித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம். … Read more

CJI On WFH: கொரோனாவின் ருத்ரதாண்டவத்தை அடக்க ஹைப்ரிட் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’

நியூடெல்லி: இந்தியாவில் இன்று (2023 ஏப்ரல் 5, புதன்கிழமை) 4,435 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் பதிவாகியுள்ள அதிக கொரோனா பாதிப்பு என்பது அச்சத்தை அதிகரிக்கிறது. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கறிஞர்களை விசாரிக்க தயாராக உள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India ) டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை … Read more

சாதிப்பிரிவுகள் அதிகரித்துவிட்டன… அதுதான் பிரச்னையே – ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து!

Governor RN Ravi Speech: கோவையில் உள்ள கே.ஜி. பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) வளாகத்தில் இன்று (ஏப். 5) நடைபெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.  ‘கம்பர் போன்று’ இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்.என். ரவி,”சமூகத்திற்கு பல்வேறு வகையில் பங்களிப்புகளை செலுத்தி வரும், இன்று விருது பெற்ற ஆளுமைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். … Read more