பட்டப்பகலில் வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை – சென்னையில் பயங்கரம்

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவு கிளை செயல்பட்டுவருகிறது. இங்கு பலரும் தங்களது நகைகளை அடமானம் வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் இன்று துப்பாக்கி முனையில் அங்கு கொள்ளை நடந்துள்ளது. ஃபெடரல் வங்கிக்கு இன்று பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்திருக்கின்றனர். வந்தவர்கள், அங்கிருந்த காவலாளி மற்றும் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். இதனையடுத்து அவர்கள் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் … Read more

திமுக VS பாஜக – ட்விட்டரில் ட்ரெண்டான 'செருப்பு பிஞ்சிரும் அண்ணாமல'

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 22) என்ற ராணுவ வீரர் காஷ்மீரில் நேற்று முன் தினம் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் இன்று மதுரை கொண்டு வரப்பட்டது. லட்சுமணனின் உடலுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திவிட்டு வந்தபோது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் திடீரென காலணிகளை வீசி பாரத் மாதா கி ஜே என … Read more

மாநில அரசு எதற்கு இருக்கிறது?… ப.சிதம்பரம் கேள்வி

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு … Read more

இங்கிலாந்தில் கடும் குடிநீர் பஞ்சம்; பரிதவிக்கும் மக்கள்

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் தண்ணீர் பஞ்சம்: பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் கோடை காலம் மிகவும் உக்கிரமாக இருந்து வரும் நிலையில்,  பல நகரங்கள் தற்போது வறட்சியை எதிர்கொள்கின்றன. மேலும் பல நகரங்களை வறட்சி பாதித்த நகரங்களாக அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பற்றாகுறை அதிகரித்து வருகிறது. இத்தனைக்கும் மக்கள் தங்கள் தேவைக்காக பாட்டில் தண்ணீரையே நாடுகிறார்கள் திடீரென்று கடைகளில் அவற்றின் தேவை அதிகரித்ததால், சில கடைகள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் பாட்டில் தண்ணீர் … Read more

விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; மனிதர்களுக்கு எமனாகும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

விண்வெளி குப்பை: : நீங்கள் உங்கள் மாலை வீட்டில் பால்கனியில் அல்லது பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, வானில் இருந்து பழைய ராக்கெட்டின் குப்பைகள் உங்கள் கூரையில் வந்து விழுந்தால் எப்படி இருக்கும். உங்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படலாம். அல்லது வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்படலாம். ஆனால் அத்தகைய நிகழ்வு சாத்தியமா? விண்வெளி கழிவுகள் எதிர்காலத்தில் மக்களுக்கு எமனாக மாறுமா? விண்வெளியில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் குப்பை பூமியில் விழுந்து கொண்டே இருக்கிறது ஆனால் நம் … Read more

இனி பேபி பவுடர் இல்லை… இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி

பிரபல பன்னாட்டு மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பெரும்பாலும் குழந்தைகளுக்கான பொருட்களை தயாரித்து வருகிறது. பிறந்த குழந்தைகள் என்றாலே ஜான்சன் அண்ட் ஜான்சன் பொருட்கள் தான் என்ற பேச்சு விளம்பரங்களில் மட்டுமில்லாமல் உலக மக்களில் மனதிலும் பதிந்து இருந்தது. சுமார் 136 ஆண்டுகளாக போட்டி இல்லாத சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் மீது  கடந்த சில … Read more

FBI on Top Secret: உளவுச் சட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது நடவடிக்கை பாயுமா?

டொனால்ட் ட்ரம்ப் உளவு சட்டத்தை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதும் இன்றைய தலைப்புச் செய்திகளாகி அனைவராலும் விவாதிக்கப்படும் உலகச்செய்தியாகிவிட்டது. டொனால்ட் டிரம்ப் வீட்டில் தேடுதல் வேட்டை நடத்திய எஃப்.பி.ஐ, பல ரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) ஒரு நீதிபதியால் சீல் செய்யப்பட்ட வாரண்ட் மற்றும் தொடர்புடைய பொருட்கள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டொனால்ட் டிரம்பின் புளோரிடா எஸ்டேட்டில் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்டது. டொனால்ட் டிரம்ப் உளவு சட்டத்தை மீறியதாக நம்புவதற்கு … Read more

உயிருக்கு போராடும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி! கத்திக்குத்து தாக்குதல் வீடியோ வைரல்

பிரபல இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நியூயார்க்கில், நேற்று( வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12) கத்தியால் குத்திய ஆசாமியின் அடையாளத்தை நியூயார்க் போலீசார் வெளியிட்டுள்ளனர். ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தின் ஆசிரியர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையை நியூயார்க் போலீசார் மேற்கொண்டுள்ளனர். … Read more

தொடர்ந்து ஓடும் ராஜபக்ச! சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சமடைந்தார்

இலங்கையில் இருந்து தப்பி சிங்கப்பூரில் அடைக்கல்ம் புகுந்த முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவிற்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கோட்டாபய ராஜபக்ச, வியாழன் அன்று (2022 ஆகஸ்ட் 11) வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாய்லாந்திற்கு சென்றுள்ளார். கடந்த மாதம் தனது தீவு தேசத்தை விட்டு வெளியேறிய பின்னர் முதலில் சிங்கப்பூரில் இருந்த அவர், இரண்டாவதாக தென்கிழக்கு ஆசிய நாட்டில் தற்காலிகமாக தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறியதாக நகர-மாநில குடிவரவு அலுவலகம் … Read more

குறைந்தபட்ச ஊதியமே ரூ.64 லட்சம் : ஊழியர்கள் கொண்டாடும் நிறுவனம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கிராவிட்டி பேமண்ட்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கிரடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகிறது.இந்நிறுவனத்தை லூகாஸ் மற்றும் Dan Price ஆகிய சகோதரர்கள் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கினர். Dan Price தற்போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.  இந்நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கம் முதலே ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கி வரும் Dan Price, தற்போது தனது நிறுவனத்தில் … Read more