கோலார் நகர்… விக்ரம் – ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் இதுவா?

சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் கோப்ரா படுதோல்வியடைந்தது. பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனையடுத்து அவர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் படம் உருவாக இருக்கிறது. இதற்கான லொக்கேஷன் தேடும் பணியில் பா.இரஞ்சித் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்தார். அந்தப் பணி முடிந்தவுடன் சமீபத்தில் படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டது. அந்தப் பூஜையில் விக்ரம், பா.இரஞ்சித், ஞானவேல் ராஜா உள்ளிட்டோர் … Read more

மாநில அரசு சேனலுக்கு தடை – எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்… மநீம கோரிக்கை

அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கல்வித் தொலைக்காட்சி கடந்த அதிமுக அரசில் அதாவது 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களுக்கான பாடம் ஒளிபரப்பப்படுகிறது. அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகளும் அதில் ஒளிபரப்பாகின்றன. இதனால் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை தடை இன்றி நடத்தியது.  அப்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி அத்தியாவசியமாக … Read more

இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு லாட்டரி; அசத்தல் தீபாவளி பரிசு

இலவச ரேஷன் அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. நீங்கள் ரேஷன் கார்டு புதுப்பிப்பைப் பயன்படுத்தினால், PMGKAY இன் பயனாளிகள் இலவச ரேஷன் பெறத் தொடங்கியுள்ளனர். தீபாவளிக்கு முன் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி இனி இலவச ரேஷன் எடுத்துக் கொள்ளலாம். தற்போது, ​​ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.18 வீதம் 3 கிலோ சர்க்கரை … Read more

Dhanteras 2022: தங்கம் அல்லது வெள்ளி எது விசேஷம்? தந்தேரஸ் நாளில் எதை வாங்குவது?

தீபாவளி 2022 ஷாப்பிங்: இந்தியாவில் தீபாவளி மற்றும் தந்தேரஸ் சமயத்தில், தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு முறையும் போலவே, இந்த முறை, இன்று தந்தேரஸ் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் எந்த பொருட்களை வாங்குவது அல்லது எதில் முதலீடு செய்வது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அதாவது, தங்கம் வாங்கலாமா அல்லது  வெள்ளி வாங்கலாமா என்ற கேள்வி அனைவரின் மனதில் குழப்பமாக இருக்கும். அந்த வகையில் நீங்களும் இதே இக்கட்டான நிலையில் இருந்தால், … Read more

பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் தற்போது திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. நாவலின் கருவை சிதைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், கோலிவுட்டிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பெருமைமிகு சினிமா … Read more

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க – சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளது தமிழ்நாட்டிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமும், தலைகுனிவும் ஆகும். பல ஆண்டுகளாகப் போராடியும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் ஏமாற்றி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் … Read more

KD the devil டைட்டில் டீசர் – பிரமாண்டமாக வெளியிடப்பட்டது

கன்னட திரையுலகில் KVN Productions, தொடர்ந்து ஹிட் படங்களை தந்து திரைத்துறையில் முன்னணியில் உள்ளது. இவர்களின் 4வது திரைப்படம் பெங்களூரில் மிகப்பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது. முதன்முறையாக, கர்நாடகா பின்னணியில் உருவாகும் ஒரு பான் இந்தியன் திரைப்படமான, “KD-The Devil” டைட்டில் இப்படத்தின் நடிகர்கள், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குநர் மத்தியில் வெளியிடப்பட்டது. பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் லெஜண்ட் தசஞ்சய் தத், முன்னணி … Read more

நீதிமன்ற உத்தரவை மீறி மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நாரேந்தல் கிராமத்தில் வெளியூரைச் சேர்ந்த ஒருவர் நண்டு கம்பெனி வைத்துள்ளார். இதனால் கிராமத்திற்கு ரூ.5 லட்சம் கட்ட கூறியுள்ளனர். ஆனால் ரூ.3 லட்சம் மட்டும் கிராமத்திற்கு கம்பெனி நிர்வாகம் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பூமிராஜன் கம்பெனி உரிமையாளருக்கு உதவியாக வேலை பார்த்து வருகிறார். இதனை காரணம் காட்டி பூமிராஜன், அவரது தம்பி காளிமுத்தன், சகோதரி வள்ளியம்மாள் ஆகிய மூன்று குடும்பத்தினரை கிராம தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சங்கிலி, … Read more

குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள்; டிஎன்பிஎஸ்சி லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வு இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வு  அட்டவணையின் படி ,செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதேபோல் குரூப் 4 தேர்வும் ஜூலை மாதம் நடைபெற்று அதற்கான முடிவுகளுக்கும் தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறைந்தபட்சம் குரூப் 2 தேர்வு முடிவுகளாவது வெளியாகியிருக்க வேண்டும்.  இதனால் தேர்வர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவியது. தேர்வு முடிவுகள் வெளியிடாத … Read more

வானிலை அறிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நேற்று அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு  பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை அக்டோபர் 22ஆம் தேதி 0830 மணி அளவில் தென்கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய மத்திய கிழக்கு  வங்கக்கடல் பகுதியில், போர்ட் பிளேர்க்கு, மேற்கு- வடமேற்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுக்கு தெற்கு- … Read more