இந்தியன் விருதுகள் 2022: பார்த்திபன் உள்ளிட்ட 100 பிரபலங்கள் கவுரவிப்பு

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி  கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் மிகப்பிரமாண்டமாக இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்,  பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், திரைப் பிரபலங்களான ராதாரவி, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு, ரம்யா பாண்டியன்,ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  சிறந்த திரைப்படத்திற்கான விருது இரவின் நிழல் படத்திற்காக  இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. … Read more

ஸ்பெஷல் உரம் ஒரு கிலோ ஒரு ரூபாய் மட்டுமே! மாநகராட்சி நிர்வாகம் புரட்சி

தூத்துக்குடி மாநகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் நுண் உரங்களை விற்பனை செய்யும் வகையில் முத்துரம் என்ற  லோகோவை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில், மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் ன்பிரித்து எடுக்கப்பட்டு மக்கும் குப்பைகளை கொண்டு விவசாயத்துக்கு தேவையான நுண்உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தை ஒரு கிலோ உரம் ஒரு ரூபாய் என வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில், … Read more

கமல் இல்லாமல் தொடங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு

இயக்குநர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவானது இந்தியன் 2 படம். லைகா புரொடக்ஷன் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்த இந்தப் படம், விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்கின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக முடங்கியது. தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட மூவர் படப்பிடிப்பு தள விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்பின்னர், இயக்குநர் சங்கர் மற்றும் லைகா புரொடக்ஷன், கமல்ஹாசன் இடையே விரிசல் உண்டாது. இயக்குநர் சங்கர் கேட்ட பட்ஜெட்டை கொடுக்க மறுத்த லைகா, தாங்கள் கூறும் பட்ஜெட்டிற்குள் … Read more

சர்வாதிகாரி மு.க.ஸ்டாலின் அவர்களே..! அண்ணாமலை அறிக்கை

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், “அடக்குமுறையால் அச்சுறுத்தல் செய்யும் ஸ்டாலின் சர்வாதிகாரியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, பாஜக மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ராமலிங்கம் அவர்களை காவல்துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா? பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, மாநில அரசின் முறையான, அனுமதி பெற்று, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் … Read more

’எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்’ அல்லு அர்ஜூனை பாராட்டும் ரசிகர்கள்

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தாவுடன் நடித்த இந்தப் படம் இந்திய அளவில் வசூலில் ஹிட் அடித்தது. பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனை வாரிக் குவித்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தொடங்கிவிட்டன. முதல் பாகத்தில் நடித்த பகத்பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் அடுத்தடுத்து கமிட்டான படங்கள் காரணமாக புஷ்பா 2 படத்தில் நடிப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக வேறு ஸ்டார் நடிகர் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சென்னை: அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் 17 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த ஆணையம் முதல்வரிடம் 3000 பக்கம் கொண்ட ஐந்து பாகங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் மீது நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரைத்துள்ளனர். அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், 3 இன்ஸ்பெக்டர், … Read more

இப்படிப்பட்ட அரசியல் செய்வதற்கு வெட்கமில்லையா பிரதமரே… ராகுல் காந்தி தாக்கு

புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இன்று வியாழக்கிழமை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ஒரு ட்வீட் மூலம் குஜராத்தில் பில்கிஸ் பானோ வழக்கு தொடர்பாக பிரதமர் மோடியை குறிவைத்துள்ளார். குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது பெண்கள் மீதான அக்கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற அரசியலில் ஈடுபடுவதற்கு வெட்கப்படவில்லையா என்று … Read more

நைட் 3 மணிக்கு சம்மர் சால்ட் அடிக்க விட்டியே – சாண்டியை சீண்டும் கார்த்தி

கொம்பன் படத்துக்கு பிறகு இயக்குர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘விருமன்’. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தனர். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன … Read more

கல்வி டிவி சிஇஓ நியமனத்தால் சர்ச்சை: அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன அப்டேட்

கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதலமைச்சர் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் … Read more

சீதா ராமம் படத்தை அனைவரும் பாருங்கள் – வெங்கையா நாயுடு புகழாரம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சீதா ராமம்’. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவான இப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் ரசிகர்கள் திரையரங்குக்கு குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்கிறார்கள். அதுமட்டுமின்றி பல நாள்கள் கழித்து ஒரு … Read more