சிரஞ்சீவியை மற்ற நடிகர்களும் ஃபாலோ பண்ணுங்க – தமிழிசை வேண்டுகோள்

தெலுங்கு திரையுலகில் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி . இவர் ரஜினியின் நெருங்கிய நண்பரும்கூட. சிரஞ்சீவி இன்று தனது 67ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தன் பிறந்த நாளையொட்டி, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கென்று தனி மருத்துவமனை ஒன்றை கட்டுவதாக அறிவித்துள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக இதனை கட்டுவதாகவும், அடுத்த ஆண்டு தனது பிறந்த நாள் முதல் இந்த மருத்துவமனை செயல்படும் எனவும் கூறியுள்ளார். ஹைதராபத்தில் உள்ள சித்தாபுரி பகுதியில் அமைய … Read more

கிருஷ்ண ஜெயந்தி விழாவில் அரைகுறை ஆடையுடன் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி

Ramanathapuram District News: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியில், ஆபாச நடனம் ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆபாச நடனம் ஆடக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதுவும் போலீசார் முன்னிலையிலேயே நடைபெற்ற ஆபாச நடன நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதுகுளத்தூர்  அருகே உள்ளது வாகைக்குளம் கிராமம். இங்குள்ள கிருஷ்ண ஜெயந்தி விழா  கடந்த சிலநாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது இதில் தேர் ஊர்வலம், உரியடி நிகழ்ச்சி … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ 22.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 23.08.2022:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி … Read more

அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணிபுதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.  … Read more

புதுச்சேரி: சட்டப்பேரவையில் நிதி ஆண்டு 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை … Read more

தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை நடிகை!

ஆணுக்கும் பெண்ணுக்கும் தான் திருமணம் என்றிருந்த நிலை மாறி தற்போது ஓரினசேர்க்கையாளர்களும் திருமணம் செய்ய தொடங்கிவிட்டனர்.  இவற்றை விட தற்போது லேட்டஸ்டாக இருப்பது ஸோலோகமி எனப்படும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம், இந்த திருமணம் தற்போது தலைதூக்க தொடங்கியுள்ளது.  தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள், சில சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள கனிஷ்கா சோனி என்கிற நடிகை தற்போது தன்னை தானே திருமணம் செய்துகொண்டு இருக்கிறார்.  பவித்ரா ரிஷ்டா, என் கணவன் என் தோழன் போன்ற … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு- நாளை விசாரணை

கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து இருந்தார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், … Read more

ரஜினி – நெல்சன் படம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்!

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சனிற்கு முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி, பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதன் பிறகு விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார் நெல்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக இவர் அடுத்ததாக ரஜினியை வைத்து … Read more

இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!

சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்த ஜெயக்குமாரி மகள் காயத்ரி, பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து விட்டு, கன்னிமாரா லைப்ரரியில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்மசிஸ்ட் படித்துள்ள விஸ்வநாதனுக்கும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தர்மபுரியில் திருமணம் நடைபெற உள்ளது.  மேலும் இவர்களது திருமண வரவேற்பு சென்னை வெப்பேரியில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் மணப்பெண் காயத்ரி தனது திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும் அனைவராலும் கவரப்பட வேண்டும் என … Read more

முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர்  ராஜ்குமார் இவர் இங்கு  நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இந்த கொடூரமான … Read more