பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்சைம்கள்; விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பம்

பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில், பிளாஸ்டிக்கை சில மணி நேரங்களிலேயே எளிதில் அழிக்கும் வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் விஷயம் என்றால் மிகையில்லை. நிலத்திலும் நீரிலும் ஆண்டு தோறும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், நிலம் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறுகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி, உலகில் பேரழிவை தடுக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது. பிளாஸ்டிக்குகள் … Read more

ஆடு பகை குட்டி உறவா: விளாடிமிர் புடினின் மகளுடன் ரகசியமாக வாழும் இகோர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போராக வெடித்து, உலகையே பொருளாதார ரீதியில் பாதித்துள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல ஜெர்மன் பத்திரிக்கையான Der Spiegel மற்றும் ரஷ்ய ஊடகமான iStories இணைந்து நடத்திய ஆய்வில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களில் ஒருவர் ஜெர்மனியில் ரகசியமாக ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மகள்களின் ஒருவரான கேத்தரினாவைப் பற்றித்தான் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் … Read more

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை … Read more

காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல வகையான கூற்றுக்கள் தினம் தினம் வெளிவருகின்றன. தற்போது, அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை சீர் குலைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சில அறிக்கைகளில், அவர் ஒரு புற்றுநோயாளி என்று கூறப்படுகிறது. தி சன் நாளிதழின்ல் வெளியான ஒரு புதிய அறிக்கையில், புடின் சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக, அவர் … Read more

கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் Reddit தளத்தில் ‘Ask Me Anything’  என்ற … Read more

அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்க்குள் செல்ல நிரந்தரத் தடை: விளாடிமிர் புடின்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு … Read more

Sri Lanka Crisis: இலங்கையில் அவசரநிலை நீக்கம்; காரணம் என்ன

இலங்கை நெருக்கடி: இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  அண்மையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு … Read more

Voyager 1: வாயேஜர் அனுப்பும் விசித்திரமான சிக்னல்களால் ஏற்படும் விஞ்ஞான குழப்பங்கள்

நாசாவின் வாயேஜர் 1 சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வித்தியாசமான சமிக்ஞைகளை அனுப்புவதால் விஞ்ஞானிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், அது சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் 1, 12 ஆண்டுகளில் நமது சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறி 2012 இல் நட்சத்திர மண்டலத்தில் நுழைந்தது. நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் ஏவப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகளாக நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் தனது பயணத்தைத் தொடர்கிறது. பூமியிலிருந்து 14.5 … Read more

கொரோனாவை சமாளிக்க இஞ்சி டீ குடியுங்கள்… வட கொரிய அரசின் உத்தரவால் மக்கள் அவதி

வடகொரியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. நாட்டில் யாரும் தடுப்பூசி போடாததாலும், மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதாலும் அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.  தவறான நிர்வாகத்தின் காரணமாக, நோயாளிகள் சிகிச்சைக்காக வீட்டு வைத்தியத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை தேநீர் குடிக்கவும், உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், வடகொரியா கொரோனா பரவல் நாட்டிற்குள் வராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடையின்றி ஓடிய பெண்ணால் பரபரப்பு

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பளத்தில் உலக திரை பிரபலங்கள் நடந்துசெல்லும் நிகழ்வு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாகும். இதில் பிரபலங்களின் உடைகள் முதல் அவர்களது அலங்காரம் வரை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இந்த அண்டு கேன்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட்டில், உண்மையில் உலகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு பெண்மணி உணர வைத்தார். ரெட் கார்பெட்டில் தோன்றிய பெண் ஒருவர் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் … Read more