பதுளை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு தீயணைப்பு பயிற்சி

பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரின் அனுசரணையுடன் நடத்தப்படும் தீயை அணைக்கும் பயிற்சி நிகழ்ச்சி நேற்று (22) மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. பதுளை மாவட்டச் செயலகக் கட்டடத்தின் வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள இடங்களிலும் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் அறிவையும் பதுளை மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களுக்கு வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம, மேலதிக மாவட்ட செயலாளர் கே.பி.ஏ.எம்.எஸ்.அபேகோன், பதுளை பிரதேச … Read more

பேருவளை பகுதியில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தல்! சிங்கள ஊடகம் தகவல்

பேருவளை பிரதேசத்தில் இருவர் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்திச் செல்லப்பட்டவர்களில் மீன்பிடி கப்பல் உரிமையாளர் ஒருவரும் மீனவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித தகவலும் இல்லை இவர்களில் ஒருவரது மனைவி கடந்த 20ஆம் திகதி தனது கணவர் வெள்ளை நிற வேனில் ஏறியதாகவும் அதன் பின்னர் எவ்வித தகவலும் இல்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனிடையே, பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் … Read more

பொறியியலாளர்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

பொது மக்களின் மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை மாதம் 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் … Read more

வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா  தலைமையிலான பேராளர்களின் கொழும்பு விஜயம்  

வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா  தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் செயலாளர்  ஶ்ரீ அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி.அனந்த நாகேஸ்வரன்  மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான  இணைச் செயலாளர்  திரு.கார்த்திக் பாண்டே  உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் அடங்கிய பேராளர்கள் குழுவினர் 2022 ஜூன் 23 ஆம்  திகதி கொழும்புக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். 2.         இந்த விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி அதி மேதகு கோட்டாபய ராஜபக்‌ஷ … Read more

போர்களமாக மாறிய எரிபொருள் நிரப்ப நிலையம்! குண்டர்களை விரட்டியத்த பெண்கள்

கலேவெல பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று (23) பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.   … Read more

போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டம் – பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களை வலுப்படுத்துதல்

எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்புமுயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். கிராம மட்டங்களில் சிகரட், மதுசாரம் உட்பட ஏனைய போதைவஸ்துக்கு செலவாகும் தொகையை குறைத்து தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு மக்களை வலுப்படுத்துதல் தொடர்பான செயலமர்வு இன்று (23) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு சமூக மட்டத்தில் இதன் … Read more

2022 ஜூன் 24ஆந் திகதி கொன்சியூலர் சேவைகள்

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக, 2022 ஜூன் 24ஆந் திகதி 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளை வழங்கும். இது தொடர்பாக ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கொன்சியூலர் விவகாரப் பிரிவு வருந்துகின்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுகொழும்பு2022 ஜூன் 23

வரக்காபொல பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய இராணுவம் அதிகாரி! (Video)

தாக்கிய படையதிகாரி வரக்காபொல தும்மலதெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு வரக்காபொல பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் ஒருவர் இராணுவ அதிகாரியினால் உடல் ரீதியாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் அலுவலர் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ லெப்டினன்ட் மற்றும் பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக வரக்காபொல பொலிஸார் … Read more

வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா சந்திப்பு

2022 ஜூன் 23ஆந் திகதி ஒரு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகள் தொடர்பில் இந்தியா மற்றும் இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர்கள் சுமுகமாகக் கலந்துரையாடினர். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்தும் கலந்துரையாடினர். தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிப்பதற்காக இந்தியா … Read more

பெட்ரோல் ஏற்றிய கப்பல் தாமதம்

இன்று காலை நாட்டுக்கு வரவிருந்த 40,000 மெற்றிக்தொன் 92 ஒக்டேன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இலங்கைக்கு வருவது தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். பெற்றோல் ஏற்றிய கப்பல் வருவதற்கு ஒரு நாள் தாமதமாகும் என்பதனால், இன்றும் நாளையும் குறிப்பிட்ட அளவு பெற்றோல் மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டோ டீசல் விநியோகம் வழமை போன்று விநியோகிக்கப்படும் என்றும் சுப்பர் டீசல் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.