விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கும் வரை எங்களின் நம்பிக்கை: பகிரங்கமாக அறிவித்த முக்கியஸ்தர்

பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இருக்கும் வரை எந்த ஒரு அரசியல் தீர்வு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே எமது நம்பிக்கையாக இருந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் அவர்கள் துப்பாக்கியை வைத்துக்கொண்டே கதைத்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.  மூன்று இலட்சம் தமிழ் பணயக் கைதிகள்  புலிகள் எப்போதுமே யுத்தத்தை பலபடுத்துவதற்காகவே சமாதானப் பேச்சுவார்த்தைகளை பயன்படுத்தினார்கள். புலிகள் சிங்கள மக்களை … Read more

பாடசாலை விடுமுறைகளை குறைக்க தீர்மானம் 

ஆகஸ்ட்-டிசம்பர் வரையிலான மாதங்களில் பாடசாலை விடுமுறைகளை குறைப்பதற்கும், மேலதிக பாடசாலை நாட்களை உள்ளடக்கி பாடசாலை பாடத்திட்ட கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கல்வி அமைச்சு செயற்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை மாணவர்களுக்கான சிறப்புக் கல்வித் திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். இதேவேளையில் பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பாடத்திட்டத்திற்கு அமைய பயிற்சிகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் நடத்தப்படும் என … Read more

துணுக்காயில், நாட்டுக் கோழி வளர்ப்புக்கான உதவித் திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் R5n செயற்திட்டப் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்புக்கான உதவிப்பொருட்கள் நேற்று (22) வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு துணுக்காயில் உலக உணவுத் திட்டத்தின் R5n திட்டத்தின் கீழ் நாட்டுக் கோழி வளர்ப்புக்கான உதவித் திட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இதன்போது நாட்டுக்கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு தெரிவுசெய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 30 கோழிக்குஞ்சுகள் மற்றும் கோழிக்குஞ்சுகளுக்கான உணவு, … Read more

வீட்டில் எரிபொருளை சேமித்து வைக்கும் மக்களால் அதிகரிக்கும் ஆபத்து

வீட்டில் பெட்ரோலை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெட்ரோலை கையாள்வது இலகுவானது அல்ல எனவும், ஆபத்து மிக அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  தீக்காயங்களுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு  அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலைப்  பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின்  சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர்  கயான் ஏகநாயக்க இதனைத்  தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டி ஏற்பட்டுள்ளதால், வாகனங்களுக்கான எரிபொருளை பொதுமக்கள் தங்களது  வீடுகளில் சேமித்து  … Read more

அரிசி விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) 22 குற்றவாளிகளுக்கு சுமார் 3.2 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அரிசி விற்பனையாளர்களுக்கான அறிவுறுத்தல் இதன்படி, அதிகபட்ச சில்லறை விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்கும் … Read more

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான காலம் வந்துள்ளது..இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம் (Tareq Ariful Islam) தெரிவித்துள்ளார். இன்று (23) பிற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்த போதே உயர்ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2022 இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 50 … Read more

இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவாத்ரா (Vinay Kwatra) தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகளை வழங்குதல் தொடர்பில் இன்று (23) முற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய விசேட தூதுக்குழு கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்திய கடன் உதவியின் கீழ் எரிபொருள், மருந்து, … Read more

ஜனாதிபதியை சந்தித்த பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்

இரண்டு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகள் மேலும் வலுப்படுத்த வேண்டிய காலம் வந்துள்ளதாகவும் இதன் மூலம் ஆடை உற்பத்தி, கமத்தொழில்,சுகாதாரம், முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஹரிஃபூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே உயர்ஸ்தானிகர் இதனை கூறியுள்ளார். இலங்கை-பங்களாதேஷ் இடையிலான 50 ஆண்டு ராஜதந்திர உறவு இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் ராஜதந்திர … Read more

தேசிய அடையாள அட்டை பெறுவது தொடர்பில் ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து இவ்வாறு புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். கைரேகைகள் மற்றும் இரத்த வகையும் உள்ளடக்கம் Sri Lanka Unique Digital ID என அழைக்கப்படும் இந்த புதிய அடையாள அட்டையில் கைரேகைகள் மற்றும் இரத்த வகை உள்ளிட்ட … Read more