இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வு வழங்க முடியும் – பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா இன்று (22) பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி: நீங்கள் இதை எவ்வாறானதொரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்? பதில்: நான் உண்மையில் நாட்டுக்காக உழைக்கவே இங்கு வந்தேன். உறுதிமொழி எடுப்பதற்கு முன், சபாநாயகரிடம் எனது சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தேன். எனது வரி அனுமதி சான்றிதழையும் சபாநாயகரிடம் கையளித்தேன். அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். … Read more

இன்றிலிருந்து மாற்றப்பட்டது பிரதமர் ரணிலின் பெயர்! கொழும்பில் அறிவிப்பு

இன்றிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான ஐக்கிய பெண்கள் சக்தியினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பெயர் மாற்றம் மேலும் தெரிவிக்கையில், எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க வேண்டிய இந்த பொலிஸார் 73 … Read more

எரிபொருளைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்க! நேற்று முதல் நடைமுறை

எரிபொருள் தேவைப்படும் சுகாதார ஊழியர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனத்தின் வாகன எண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்த பிறகு வரும் வெள்ளிக்கிழமை முதல் எரிபொருள் கிடைக்கும். நேற்று முதல் நடைமுறை  இதற்கான பதிவு நடவடிக்கைகள் நேற்று (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரமே சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. … Read more

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு..

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று (22) முற்பகல், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஆணைக்குழுவின் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. சுங்கம் தொடர்பாக முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிப்பதற்காக 2021 பெப்ரவரி 24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஆறு பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. … Read more

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்தது! ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தின் தற்போதைய நிலவரம்

புதிய இணைப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.  இதன்படி, குறைந்தது 950 பேர் பலியாகியுள்ளதாகவும் 600இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   முதலாம் இணைப்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 250 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும், 150 பேர் படுகாயமடைந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  6.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் (Khost) நகரிலிருந்து சுமார் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று (21) அதிகாலை ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 130 பேர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 255 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளில் பெரும்பாலானவை பக்டிகா மாகாணத்தில் பதிவாகி உள்ளன. நிலநடுக்கம் காரணமாக அங்கு இதுவரை 255 … Read more

இலங்கைக்கு மேலதிக கடன்:நாளை இந்திய அதிகாரிகள் இலங்கை வருகை

இலங்கைக்கு மேலதிக கடன்களை வழங்குவது பற்றி கலந்துரையாடுவதற்கென மூன்று இந்திய அதிகாரிகள் நாளை இலங்கை வரவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (22) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு பிரதமர் உரையாற்றினார். அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதாக பிரதமர்  தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பான ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதாகும். இது தவிர, வேறு வழிகள் இல்லை என்றும் அவர் கூறினார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 70 மில்லியன் அமெரிக்க … Read more

நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் – காரசாரமாக பதிலளித்த ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் இன்று நாடாளுமன்றத்தில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையில் காரசாரமான வார்த்தை மோதல் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அமளிதுமளி 95 அமெரிக்க டொலர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் 129 அமெரிக்க டொலர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த நாட்களாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பில் ஆராயுமாறு, நிதியமைச்சர் என்ற ரீதியில் பிரதமரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கோரிக்கை விடுத்தார். ரணிலின் நக்கலால் … Read more

அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

இலங்கையிலிருந்து அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்காக வழங்கப்படும் 5 வருட விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் பாதிக்காத விடுமுறை ஓய்வூதியம் பாதிக்காத வகையில் அதிகபட்சமாக 5 வருட விடுமுறையானது அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்நேரமும் தயாராக இருக்குமாறு அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்! தனியார்துறையினருக்கு விசேட அறிவிப்பு  ஒரு வருட விடுமுறை … Read more

இலங்கை மத்திய வங்கியால் 20 ரூபா குற்றிநாணயம் வெளியீடு

இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. முதன்முதலில் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு 1871ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது. திருகோணமலை 150 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியால் அதனை நினைவுகூறும்முகமாக 20 ரூபா ஞாபகார்த்த குற்றிநாணயம் வெளியிடப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட குற்றி நாணயம் நேற்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்மவிற்கு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஸ.சரீப்டீனினால் வழங்கி வைக்கப்பட்டது. நாணயக்குற்றி நினைவு நாணயக்குற்றி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், உட்பட … Read more