திரு.தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

திரு.தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று (22) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமா காரணமாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் ஏற்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்22ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூன் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் இரத்தினபுரி, களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கம்பஹா, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில்சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் … Read more

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டது கால அவகாசம்! பகிரங்க அறிவிப்பு

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் இன்றி வெறுமனே நாடாளுமன்றத்தின் காலத்தை இழுத்துக் கொண்டு செல்வதனை அனுமதிக்க முடியாது என்றும், இதனால் நாடாளுமன்றத்தை பகிஷ்கரிக்கும் தாம், திட்டங்களை முன்வைப்பதற்காக அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்குவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மருந்து தட்டுப்பாட்டால் பிள்ளைகள் வைத்தியசாலைகளில் இறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் எரிபொருள், எரிபொருள் வரிசைகளில் இறக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் … Read more

இலங்கை கிரிக்கெட் அணி சாதனை

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நேற்று நடைபெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் கள தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல … Read more

ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் விவசாயிகளுக்கு இந்தியாவின் உரம்

தேசிய சுற்றாடல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது கருத்துக்களை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்  அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிடமிருந்து கிடைக்க உள்ள உரங்கள் அடுத்த மாதம் 6ஆம் திகதியளவில் இலங்கையை வந்தடையவுள்ளன. அத்துடன், ஜூலை மாதம் 15ஆம் திகதிக்குள் இந்த உரங்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க … Read more

உயர்வடைந்த பணவீக்கத்தால் மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி

இலங்கையின் தற்போதைய உயர்மட்ட பணவீக்கம் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு தொடரும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். இதனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகரித்துள்ள பணவீக்கம் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். விசேடமாக தொழில் இழப்பு, வருமானம் இழப்பு ஆகியவை ஏற்படும் சூழலில் வருமானம் குறைந்த கீழ் மட்ட மக்கள் கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொள்வார்கள். … Read more

வடக்கில் வாழும் உரிமை சிங்களவர்களுக்கும் உண்டு! சரத் வீரசேகர எம்.பி

வடக்கில் வாழும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் உண்டு என அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது 52 வீத தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து பேசிய போதே வீரசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், வடக்கில் சிங்கள மக்களுக்கு வாழ உரிமை இல்லை என தாம் குறிப்பிடவில்லை என வீரசேகரவின் உரையின் போது நாடாளுமன்ற … Read more

கல்வித்துறை சிக்கல்களை தீர்க்க விசேட நாடாளுமன்ற உபகுழு! டளஸ் பிரேரணை

கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக விசேட நாடாளுமன்ற உபகுழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று டளஸ் அலஹப்பெரும வலியுறுத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் மீது உரையாற்றும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள டளஸ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், கொவிட் தொற்று ​நோய் பரவல், பொருளாதார நெருக்கடி என்று பல்வேறு காரணிகளால் பாடசாலை மாணவர்களின் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்களினதும் கல்வி நடவடிக்கையில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு சில … Read more