தம்மிக்க பெரேரா நாளை பதவிப் பிரமாணம்

பிரபல வர்த்தகர் தம்மிக பெரேரா நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். நாளைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. தம்மிக பெரேரா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுக்காமலேயே நிராகரித்திருந்தது. ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சராக பதவி பிரமானம்  இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள தம்மிக … Read more

சுகாதாரத்துறையில் மருந்து தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சர்….

சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக  மேலும் தெரிவிக்கையில்… இந்த நேரத்தில், சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் ,விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த நிர்வாகத் துறையில் … Read more

ரணிலைப் பிரதமர் பதவிக்கு ஒருபோதும் முன்மொழியவில்லை! மஹிந்த அமரவீர

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு ஒருபோதும் முன்மொழியவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் , ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமர் பதவிக்கு நியமிக்குமாறு முன்மொழிந்திருந்ததாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பொய் … Read more

குழந்தைகளின் உடல்நிலையில் திடீர் மாற்றங்கள்: உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்

பிறந்த குழந்தையை வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர், வைத்தியசாலையில் இருந்ததைப் போலவே குழந்தை நன்றாக பாலை உறிஞ்சி குடிக்கின்றதா? குழந்தையின் உடல் மஞ்சள் நிறமாக மாறுகின்றதா? சிறுநீர் மற்றும் மலம் என்பன நல்ல முறையில் வெளியேறுகின்றனவா? என்பன குறித்து உன்னிப்பாக அவதானித்து ஏதேனும் வித்தியாசங்கள் இருக்குமிடத்து அவ்வாறான குழந்தைகளை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்று குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.  இதுபோன்ற ஆபத்தான காரணிகளை புறக்கணிப்பது, … Read more

நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணெண்ணெய்

யுத்த காலத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருந்தாக கூறப்படும்  715 லீற்றர் மண்ணெண்ணையை முல்லைத்தீவு பாதுகாப்புப் படையினர் நேற்று (20) கைப்பற்றியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கு நிலத்தை தோண்டுவதற்காகச் சென்ற போது நிலத்தடியில் பிளாஸ்டிக் கேன் ஒன்று காணப்பட்டதையடுத்து ,புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதனையடுத்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், மண்ணெண்ணெய் வைக்கப்பட்டிருந்த இடத்தை தோண்டி அதனை … Read more

அடுத்த மாதம் வரை பொறுமையாக இருங்கள்! அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்

பொதுமக்கள் அடுத்த மாதம் வரை பொறுமையுடன் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைக்கு பொதுமக்கள் அனைவரும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமை குறித்து அரசாங்கம் தெளிவாக அறிந்துள்ளது. உண்மையில் மிகச் சிரமமான காலப் பகுதியொன்றையே நாம் கழித்துக் கொண்டிருக்கின்றோம். அடுத்த மாதம் நெருக்கடிகள் தளர்வு பெரும்பாலும் அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் இந்த நெருக்கடி நிலைமையில் ஓரளவுக்குத் தளர்வுகள் … Read more

காலாவதியாகும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி, விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை

காலாவதியாக இருக்கும் டின் மீன்களின் உற்பத்தித் திகதி மற்றும் விலை என்பவற்றை மாற்றி சந்தைக்கு வினியோகிக்கும் தொழிற்சாலை ஒன்றில் காணப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிக்கத்தக்க டின் மீன்கள் நேற்று (20) மாலை கைப்பற்றப்பட்டதாக குருநாகல் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. பன்னல மூக்கலான பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது  விசாரணைகளில் இருந்து மோசடி கணடறியப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையில் மருந்துப் பொருட்கள் குறித்து சுகாதார அமைச்சர்….

சுகாதாரத்துறையில் முகாமைத்துவம் செய்ய முடியாத அளவுக்கு பாரிய மருத்துவ பொருட்களுக்குதட்டுப்பாடு இல்லை. இவ்வாறான சூழ்நிலையில சுகாதார அமைச்சு இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்று சுகாதார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…   இந்த நேரத்தில்இ சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குழுக்களையும் விசேட வைத்திய நிபுணர்களையும் இந்த … Read more

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் யுவதி ஒருவரிடமிருந்து பறிக்கப்பட்ட பணம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான வெள்ளவத்தையின் கடற்கரை வீதி பகுதியில் யுவதியொருவரிடமிருந்து பணம் மற்றும் ஏரிஎம் அட்டை என்பன பறித்து செல்லப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளவத்தை சம்பவம் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்த யுவதி அருகில் இருந்த ஏரிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பியுள்ளார். இதன்போது வேகமாக மோட்டார்சைக்கிளொன்றில் வந்த இருவர் யுவதியிடமிருந்து பணத்தையும், ஏரிஎம் அட்டையையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த … Read more