கைதடியில் சித்த மருத்துவ போதனா சாலையில், சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் கைதடியில் சித்த மருத்துவ போதனா சாலையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது உள்ளக பயிற்சி வைத்தியர்கள் (Intern Medical Officers), வைத்தியர்கள் ஆகியோரின் வழிகாட்டலில் நோயாளர்களுக்காக யோகா வழிகாட்டல் நிகழ்வு இடம்பெற்றன..

வியாளேந்திரனின் தம்பி கைது!! இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்!!

 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார். இன்று காலை மட்டக்களப்பில்உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து 15 லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவ்வாறு இலஞ்சம் கோரயவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாளேந்திரனின் சொந்த தம்பியான சதாசிவம் மயூரன். இவர் இவர் பிரதேசசபையின் ஆழும்கட்சி உறுப்பினர். … Read more

எதிர்க்கட்சியினால் நாளை கொண்டுவரப்படவிருக்கும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை சுயாதீன பாராளுமன்றக் குழுவுக்கு

பாராளுமன்றத்தை இவ்வாரத்தில் இன்றும் (21) நாளையும் மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பாராளுமன்றத்தை ஜூன்21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தபோதும், தற்போதைய நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், எதிர்க்கட்சியினர் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிப்பதாக … Read more

பதுளை மாவட்டத்திற்கு ,இந்திய அரசாங்கத்தின் அரிசி

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் வழங்கப்பட்ட அரிசி பொதிகளில் ஒரு தொகுதி இன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகல ,பதுளை ஹாலி எல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு பகுந்து அளிப்பதற்காக பதுளை புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.  இதில் பசறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 1800 அரிசி மூட்டைகளும் ,லுணுகல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசி மூட்டைகளும் ,பதுளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 அரிசியை மூட்டைகளும் ,ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 900 … Read more

எரிபொருள் வரிசையில் பிறந்தநாள் கொண்டாட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.  குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, எரிபொருள் வரிசை என்பன மக்களை உச்சக்கட்ட அதிருப்தி நிலைக்குக் கொண்டுச் சென்றுள்ளது.  எரிபொருள் வரிசையில் பிறந்தநாள் கொண்டாட்டம் இந்த நிலையில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல், பானம் வழங்குதல் என பல மனிதாபிமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இவ்வாறான நிலையில் எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே, தன்னுடைய பிறந்த​நாளை யுவதியொருவர் … Read more

சர்வதேச யோகா தினம் இன்றாகும்

சர்வதேச யோகா தினம் இன்றாகும். இதனையொட்டி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்கு அமைய, 2015ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச யோகா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய யோகா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டிருந்தார்.

மரண தண்டனை கைதியை விடுதலை செய்ய மைத்திரி 800 கோடி ரூபா பெற்றாரா..!

றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரை விடுதலை செய்ய 800 கோடி ரூபா கையூட்டல் பெற்றுக் கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் றோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு மைத்திரி ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார். அதுரலி ரதன தேரரின் கோரிக்கை மரண தண்டனை விதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலி ரதன தேரர் … Read more

மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

நாட்டில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்வெட்டு நடைறைப்படுத்தப்படும் முறை இதன்படி, M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை ஐந்து மணி முதல் காலை 8:20 வரையான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.  ஏனைய வலங்களில் இரண்டு மணித்தியாலங்களும்  முப்பது நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   Source link

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (20)நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றித் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சைக்குரிய நிலைமைகள் தோன்றியுள்ளமையால்இ 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற நன்மைபயக்கும் பிரிவுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலைமையின் கீழ் தற்போது முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடி நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி … Read more

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் நீடிக்கப்படும்…

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமான சேவைகளை இயக்கவுள்ளது. இலங்கை விமான சேவைக்கு அதிகமான தடவைகள் சீனாவிற்கு விமான சேவைகளை இயக்குவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் (Qi Zhenhong) கடந்த 16ஆம் திகதி கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் மற்றும் வழங்க எதிர்பார்க்கப்படும் பொருளாதார … Read more