இந்திய மேற்கு பிராந்திய கடற்படை கப்பல்களின் இலங்கைக்கு….

நட்புறவு பாலங்களை கட்டியெழுப்புவதற்கான இந்திய கடற்படையின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இந்திய மேற்கு பிராந்திய கடற்படையின் நான்கு கப்பல்கள் மேற்கு பிராந்திய கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா அவர்களின் கட்டளையின் கீழ் 2022 மார்ச் மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தன. சுதேசிய முறைப்படி அமைக்கப்பட்ட ஏவுகணைக் கப்பலான பிரம்மபுத்ரா,  தல்வார் கப்பல் சகிதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்த நிலையில் சுதேசிய முறையிலான நாசகாரியான ஐஎன்எஸ்.சென்னை மற்றும் … Read more

கோட்டாபய இருக்கும் இடத்தை தேடிச் செல்வோம்! கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம் – பகிரங்க அழைப்பு

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் செவ்வாய் கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் போது ஜனாதிபதிக்கு செய்தியை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வீட்டிற்குள் இருந்துக்கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தாது, வெளியில் இறங்கி போராட வாருங்கள். கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரும் செவ்வாய் … Read more

அடுத்த 6 ஆண்டுகளுக்குள் 5,000 மெகா வோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க ஜனாதிபதி பணிப்புரை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டத்திற்காக இந்திய அதானி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் முதலீட்டை பெற அமைச்சரவை உபகுழு அனுமதி அளித்துள்ளது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 6 வருடங்களுக்குள் 5,000 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் சேர்க்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் .ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதானி இந்தியா நிறுவனம் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க … Read more

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இந்திய யாத்திரிகர்கள் பங்கேற்பு

2022 மார்ச் 11 – 12 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் குறிப்பாக மீனவர்கள் மற்றும் பாதிரியார்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 100 இந்திய யாத்திரிகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, சமஎண்ணிக்கையிலான இலங்கை யாத்திரிகர்களும் இத்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ் மற்றும் கொன்சுலேட் ஜெனரல் காரியாலயத்தின் ஏனைய அதிகாரிகள் விசேட விருந்தினர்களாக இத்திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர். 2.    இத்தீவிற்கு வருகை தந்திருந்த யாத்திரிகர்களை … Read more

கோட்டபாயவுக்கு புதிய பட்டம் கொடுத்த ஹரின் பெர்னாண்டோ

 வெட கரண அபே விருவா (வேலை செய்யும் எம் வீரன்) என்ற பாடலில் அது உண்மையாகவே வேலை செய்யும் எம் வீரனா ? அல்லது விலை உயர்த்தும் வீரன் என்று உள்ளதா என்ற ஒரு சந்தேகம் எமக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”1948 இந்த சுதந்திரத்தின் பின்னர்,இவ்வாறானதொரு காலத்தை, இவ்வாறு தோல்வியடைந்த ஒரு அரசாங்கத்தை நாம் பார்த்ததேயில்லை! 2014 இல் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததைப் பார்த்தோம், அவர் … Read more

ஹிந்தி மொழி கற்க விரும்பும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள்

இந்தியாவிற்கு சென்று ஹிந்தி மொழி கற்க விரும்பும் மாணவர்களுக்காக புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின் மனிதவள அபிவிருத்தி அமைச்சு புலமைப் பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள், ஆக்ராவில் உள்ள கேந்த்ரீய ஹிந்தி சன்ஸ்தான் என்ற நிறுவனத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் ஹிந்தி கற்கை நெறியைத் தொடரலாம். ஜீசீஈ உயர்தரப் பரீட்சையில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாகவோ, இலங்கையின் பல்கலைக்கழகமொன்று நடத்திய ஏதோவொரு ஹிந்தி கற்கைநெறியையோ படித்தவர்கள் புலமைப்பரிசிலுக்காக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் … Read more

மீண்டும் 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் ஒன்றின் விலை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும். டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 … Read more

சீனாவில் மீண்டும் 'கொரோனா' அதிகரிப்பு

சீனாவில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு காரணமாக அங்கு பல்வேறு மாகாணங்களில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து … Read more

நாளை பஸ் கட்டணங்கள் மறுசீரமைப்பு  

பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்கமுடியாது எனவும் நாளை அமைச்சரவையில் இதுகுறித்து ஆராய்ந்த  பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நிதியமைச்சர், பஸ் உரிமையாளர்களின் சங்கத்துடன் இதுதொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாக போக்குவரத்து  அமைச்சர்  தெரிவித்துள்ளார். தனியார் பஸ்களுக்காக எரிபொருள் நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும். எனினும், அது நடைமுறைச்சாத்தியம் அல்லாத விடயம் என்று கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, புதிய பஸ்கட்டண மறுசீரமைப்புத் தொடர்பில் பொருத்தமான நடைமுறைகள் குறித்து பஸ் சங்க உரிமையாளர்களும் தமது … Read more