மீண்டும் 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் ஒன்றின் விலை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும். டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 … Read more

நாராஹேன்பிட அபயராம விகாரையில் இடம்பெற்ற சங்ககத தக்ஷினாவ

கொழும்பு பல்கலைக்கழக வேந்தர், நாராஹேன்பிட அபயாராமாதிபதி வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தலைமை தேரரின் தாயாரான பொடி மெனிக்கே அம்மையாரை நினைவுகூர்ந்து நேற்று (12) அபயாராம விகாரையில் இடம்பெற்ற பிக்குமாருக்கு காணிக்கை செலுத்தும் (சங்ககத தக்ஷினாவ) நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கலந்துக் கொண்டார். சங்ககத தக்ஷினாவ நிகழ்வின் நிறைவில் பங்கேற்றிருந்த மஹா சங்கத்தினருக்கு அடபிரிகர கொடுக்கப்பட்டதுடன், கௌரவ பிரதமரினால் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய திவில்கும்புரே விமலதம்ம தேரருக்கு அடபிரிகர வழங்கப்பட்டது. பெல்லன்வில ரஜமஹா … Read more

இலங்கையின் தெலுங்கு மக்களின் பிரச்னைகளை தீர்க்க கௌரவ பிரதமர் தலையீடு

இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்தார். அகில இலங்கை தெலுங்கு கலைஞர்களின் கலாசார சங்கத்துடன் அலரிமாளிகையில் நேற்று (11) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இவ்வாறு தெரிவித்தார். இலங்கையின் தெலுங்கு மக்களின் தலைவர் திரு.கே.ஆர்.அனவத்து … Read more

இலங்கையின் அவல நிலையை அம்பலப்படுத்திய சர்வதேச ஊடகவியலாளர்

இலங்கையின் தற்போதைய அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழக ஊடகவியலாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல ஊடகவியலாளரான ராதா கிருஷ்ணன் என்பவர் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.. அதனை தெளிவுபடுத்தும் வகையில் அவர் வெளியிட்ட பதிவில், “இலங்கையின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்று கேட்க வேண்டுமா? இதற்கு ஒரு உதாரணம்: அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் A4 தாள்கள் அதிகளவில் கொள்வனவு செய்து … Read more

கோறளைப்பற்று மத்தியில் சமுர்த்தி திணைக்களத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள்

ஜனாதிபதியின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திணைக்களத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் சமுதாய அடிப்படை அமைப்பு அலுவலகத்திறப்பு, சௌபாக்கியா வீடு கையளிப்பு, வாழ்வாதாரத்தினை மேம்படுத்த உதவிகள், சமுதாய அடிப்படை அமைப்பினருக்கு அலுவலகப்பைகள் வழங்கும் நிகழ்வு என்பன செயலகத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸ்ஸமில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், செயலக உதவிப்பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி.றமீசா, … Read more

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும்

சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும். கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின் தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 

இலங்கை மக்களை ஏமாற்றும் அரசின் மோசமான செயல்! ரகசியங்களை அம்பலப்படுத்தும் பிரமுகர்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்றும் (12) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் நேற்று காலை மிகவும் இடம்பெற்றது.  பொதுப்பட்டமளிப்புவிழாவின்போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் … Read more

மக்களுக்கு பெரும் நெருக்கடி – நாளை முதல் தனியார் பஸ்சேவை பணி புறக்கணிப்பு

நாட்டில் நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்புக்கு நிகராக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிடின் அல்லது டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டால் நாளை முதல் பஸ்கள் சேவையில் ஈடுபடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். டீசல் லீற்றர் ஒன்றிற்கு 55 ரூபா அதிகரிப்பானது 45 சதவீத அதிகரிப்பாகும். பஸ் கட்டணக் கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணத்தில் 15 வீத அதிகரிப்பு தவிர்க்க … Read more