இலங்கையின்15 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை (PHOTO)

சப்ரகமுவ, மேற்கு, தெற்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மின்னல் தாக்கங்கள் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை மத்திய, தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை வீழ்ச்சியின் போது சில பகுதிகளில் காற்றும் பலமானதாக வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் மின்னல் … Read more

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு

11.03.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு    

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

பேருந்து கட்டணங்களை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும், பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில்,இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக நாளை முதல் முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணங்களை அதிகரிப்பதற்கு அந்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஆரம்ப கிலோமீற்றர் தூரத்திற்கு 70 ரூபாவாகவும், ஏனைய கிலோமீற்றருக்கு … Read more

ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய நிவாரணத் திட்டம்

ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கார்கில்ஸ் பூட் சிட்டி ( Cargills food city ) ஊடாக நேற்று நேற்று முன்தினம் (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிகள் ( Cargills food city ) மற்றும் மருந்தகங்களிலும் ( Pharmacy ) ஓய்வூதியம் பெறுவோருக்கு சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பை … Read more

வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு

யாழ்ப்பாணம் – குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடகடல் நிறுவனத்தில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் குறித்த நிர்வாகத்தினரால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து மகஜர் ஒன்றை  கையளித்திருந்தனர். இதன்போது தமது நிறுவனத்தில் தற்போதுள்ள நிர்வாகம் பாரபட்சமானதும் வினைத்திறனற்றதுமாக இருப்பதால் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தமக்கான … Read more

நான் மீண்டும் பிரதமரானால்……! அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் அதிரடி அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வீர்களா என நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். “நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” எனவும் ரணில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கூட்டவுள்ள … Read more

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி (Online) ஊடாக……….

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக (Online) சமர்பிக்க முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜனாதிபதியின் கண்காணிப்புக்கு…

வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குறித்த தொழில்சார் திறன்கள், அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பத்தரமுல்லை, கொஸ்வத்தை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று (11) முற்பகல் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி … Read more

கொழும்பில் அடை மழைக்கு மத்தியில் திரண்டுள்ள மக்கள் (Video)

நாட்டில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் பல எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும், மண்ணெண்ணெய் பெறுவதற்காகவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.  எனினும் தற்போது கொழும்பின் பல பகுதிகளில் அடை மழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் வெள்ள நீர் என்பவற்றையும் பொருட்படுத்தாது மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ள … Read more