காஸிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும்

காஸிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும் என்று ‘லிற்றோ காஸ் நிறுவனம்’ தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நேற்று(11) பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும்  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் வாக்காளர் தின தேசிய நிகழ்வு

வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், உலகளாவிய ஜனநாயக வரலாற்றில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆனால் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பலருக்கும் குறைந்தளவு அறிவே காணப்படுகிறது. வாக்காளர் தினத்தைக் … Read more

குளிர்சாதனப் பெட்டிகளில் இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக வர்த்தக நிலையங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. குளிரான உணவுகளில் நிறம், மணம், தோற்றம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டால், அது மனிதர்கள் உண்ணத் தகுதியற்றதாக மாறியுள்ள்து என்பதால், இதுபோன்ற உணவுகளை விற்பதையோ, வாங்குவதையோ தவிர்க்குமாறு சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மனித பாவனைக்கு உகந்தவை அல்லாத இறைச்சி மற்றும் பால் … Read more

கௌரவ பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா

இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (10) பிற்பகல் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. 500 க்கும் மேற்பட்ட இலங்கை வணிகங்களை உள்ளடக்கிய இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவை உள்ளூர் தொழில்முனைவோரை முதன்மையாக கொண்ட பேரவையாகும். இப்பேரவையின் ஆரம்பக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கலந்துகொண்டிருந்தமை விசேடம்சமாகும். அதன் பின்னர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பல தடவைகள் … Read more

“நாங்கள் சொந்த படையினரால் சுட்டுக்கொல்லப்படுவோம்” -சரணடைந்த ரஸ்ய படையினர்! (காணொளி)

உக்ரைனிய படையினரிடம் சரணடைந்த தம்மை, தமது நாடான ரஷ்யாவில் இறந்து விட்டதாகவே கருதுவதாக, உக்ரைனில் இடம்பெற்ற மோதல்களின்போது உக்ரைன் படையினரிடம் சரணடைந்த ரஷ்ய படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் போர் முடிந்ததும் கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் தாம், ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டால் அங்கு தம்மை படையினர் சுட்டுக்கொன்று விடுவார்கள் என்றும் சரணடைந்த உக்ரைனிய படையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். தாம் ரஷ்யாவில் உள்ள தமது பெற்றோரை அழைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது தமக்கு ஏற்கனவே இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பெற்றோர் … Read more

உங்கள் பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பாதீர்கள்! ரஷ்ய தாய்மாரிடம் கோரும் உக்ரைன் ஜனாதிபதி

தமது பிள்ளைகளை உக்ரைன் போர்க் களத்துக்கு அனுப்பவேண்டாம் என்று ரஷ்ய தாய்மாரிடம் உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைனிய ஜனாதிபதி வோலாடிமிர் ஸெலன்ஸ்கி தமது பிந்திய காணொளி பதிவில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் தமது பிள்ளைகளை போர்க்களத்திற்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் இருக்கும் இடத்தில் விழிப்புடன் செயல்படுமாறும் உக்ரைனிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். “ரஷ்ய தாய்மார்களுக்கு, குறிப்பாக கட்டாயப்படுத்தப்பட்டு பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்ட பிள்ளைகளின் தாய்மார்களுக்கு இதை மீண்டும் ஒருமுறை கூற விரும்புகிறேன். உங்கள் குழந்தைகளை வெளிநாட்டு போருக்கு … Read more

ராஜபக்சவின் முகவர் சுமந்திரனே வெளியேறு! தமிழகத்தில் வெடித்தது போராட்டம் (Video)

ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசின் கைக்கூலி சுமந்திரனை தமிழகத் தலைவர்கள் சந்திக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இப் போராட்டத்தின் போது சுமந்திரனுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  இலங்கை அரசை அனைத்துலக விசாரணையில் இருந்து காப்பாற்றும் துரோகி சுமந்திரனே தமிழகத்தை விட்டு வெளியேறு, ஐ.நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கைக்கு மூன்று தடவைகள் கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்த சிங்களத்தின் கைக்கூலி சுமந்திரனுக்கு தமிழகத்தில் என்ன வேலை?, விடுதலைப் புலிகள் மீதும் விசாரணை வேண்டும் என்று சிங்களத்துக்கு … Read more

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெற அரசு தீர்மானம்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசர தீர்மானமொன்றை எடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது. எனினும், மேற்படி முடிவை தற்போது மாற்றியுள்ள அரசு, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகியுள்ளது. இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்னர், தேர்தலை நடத்தி மக்கள் … Read more

இன்று வெளியாகவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

கடந்த வருட 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதியன்று நடைபெற்றது. இப் பரீட்சையில் தமிழ் மொழி மூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழி மூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் … Read more

பதவி விலக தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய – பரபரப்பு தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அரசியல்வாதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த சந்தர்ப்பத்தில் அரச ஆட்சியை தனது கையில் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என பசில் ராஜபக்ஷ யோசனை செய்து வருகின்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் மூலோபாயத்திற்கமைய … Read more