கடந்த 24 மணிநேரத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்டின் அதிரடி மாற்றங்கள்! திணறும் பொது மக்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றுவதாக சபதம் எடுத்த ராஜபக்ஷ ரெஜிமென்ட் அணி இன்று நாட்டு மக்களுக்கு வரலாறு காணாத அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு அரசாங்கத்தின் போதும் இல்லாத வகையில் மக்களின் வாழ்க்கை செலவு சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிப் பீடம் ஏறிய ராஜபக்ஷ சகோதரர்களை இலங்கையின் பொருளாதார நிலைமை படாதபாடு படுத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றினால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி … Read more

இலங்கையர்களுக்கு தொடரும் பேரிடி! மருந்துகளின் விலைகளை உயர்த்த அனுமதி

மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவருகிறது.  அதன்படி மருந்துப் பொருட்களின் விலைகள் 29 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.  தொடர்புடைய செய்தி… இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!  இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு  இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிப்பு! இலங்கையர்களுக்கு விழுந்த மற்றொரு அடி  இலங்கை வரலாற்றில் … Read more

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய 24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ.141,000 ஆக காணப்படுகிறது. 22 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. தங்க விற்பனை வரலாற்றில் பதிவான அதிகபட்ச விலையென்பது குறிப்பிடத்தக்கது.   Source link

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 4ஆயிரத்து 911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து309 ஆகும். அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, … Read more

இன்று முதல் விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக  அவர் … Read more

பாண் மற்றும் உணவுப் பொதி கொள்வனவு செய்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி உணவுப் பொதியொன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முதலாம் இணைப்பு பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்… – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) அவர்கள், இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்தார். நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மசட்சுகு அசகாவா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தனியார் துறையின் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு … Read more

ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரஸ்யாவில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஸ்யாவில் வீசா மற்றும் மாஸ்டர் கார்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்ததை தொடர்ந்து பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருவதாகவும், நேற்று முதல் வீசா மற்றும் மாஸ்டர் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக ரஸ்யாவின் நாணய அலகான … Read more

விபத்துக்களின் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு

தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று (10) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமூலத்தை  சமர்ப்பித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நபர் ஒருவர் பணியில் ஈடுபடும்போது, விபத்துக்குள்ளானால், வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் துறையில்   ஊழியர் சேவைக்கு வரும்போதோ, பணியிலிருந்து திரும்பும்போதோ விபத்துக்குள்ளானால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்த இழப்பீட்டு திருத்தச் சட்டமூலத்தில் அவர்களுக்கும் இழப்பீடு … Read more