கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ … Read more

இலங்கையில் 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு டொலர் (Video)

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது. அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், … Read more

இலங்கைக்கான LNG இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஏற்கனவே திட்டமிட்டபடி, இலங்கைக்கான (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New fortress Energy) நிறுவனம் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அருகாமையில் (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்றை … Read more

ஏற்றுமதி சந்தையில் இறப்பர் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் இறப்பர்  தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக, அசோசியேட் அட்வான்ஸ் இறப்பர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.   இந்த திட்டத்திற்காக  5.85 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அசோசியேட் அட்வான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.    

நாட்டு மக்கள் அதிகமாக கேட்கும் பாடல்! தேடிச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் – சபையில் அம்பலம்

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பி கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இந்த நாட்களில் மக்கள் வேலை செய்யும் எம் வீரன் என்ற பாடலையே மக்கள் அதிகம் கேட்கின்றனர். நான் நினைக்கவில்லை, யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடலை விடவும் இந்தப் பாடல் பிரபல்யமடைந்துள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதே … Read more

கோட்டபாய ஜனாதிபதியாவதற்கு உதவிய இந்திய வம்சாவளி சட்டத்தரணி! ரகசியத்தை பகிரங்கப்படுத்திய விமல்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்ச தயரான போது அந்த கனவை தான் உட்பட தனது கட்சியும் தகர்த்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பசில் ராஜபக்ச தயார் நிலையில் இருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்ததாகவும் விமல் … Read more

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்! – வரலாற்றில் மிகப் பெரிய உயர்வு பதிவானது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (10) வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 692.35 புள்ளிகள் அதிகரித்து 10,856.07 புள்ளிகளாக இருந்தது. இது 6.81 சதவீதம் அதிக உயர்வாகும். அதேபோன்று, S&P SL20 இன்டெக்ஸ் இன்று 29.5.89 புள்ளிகள் அதிகரித்து 8.52 சதவீதமாக இருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகும். எவ்வாறாயினும், 2022ம் ஆண்டு இன்று … Read more

நாடாளுமன்றில் விரையாமாகும் மின்சாரம்!

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் இன்று செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் இன்று சகல மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டிகள் செயற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் தியாகம் செய்ய வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எரிசக்தி நெருக்கடியை அடுத்து நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் … Read more

47 ஆவது தேசிய  விளையாட்டு விழா

47 ஆவது தேசிய மட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் போட்டிகளை … Read more