ஒட்டு மொத்த ரஷ்யாவையும் மிரளவைத்த கோரச்சம்பவம்! விடைதெரியாத மர்மம்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link

எரிபொருள் தொடர்பான பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு வரும்… திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்… எரிசக்தி அமைச்சின் செயலாளர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா அவர்கள் தெரிவித்தார். “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்ஹ அவர்களும் கலந்துகொண்ட இந்த ஊடக … Read more

இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் – பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ

இலங்கை பெண்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் என பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சினால் (MoWECP) ஜகர்த்தாவில் இணைய தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட ‘ஆற்றல்மிக்க பெண்கள் பேசத் துணிந்தவர்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022 சர்வதேச அமர்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமரின் … Read more

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. … Read more

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார். அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் … Read more

நாளையும் மின்வெட்டு

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் … Read more

அரசாங்கத்தின் உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு….

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முக்கிய நகர அபிவிருத்திப் பணிகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ், காலி, பண்டாரவளை, இரத்தினபுரி நகர மத்தி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, … Read more

இலங்கையில் புதிய நடைமுறை! இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என பெண்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more

உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமை தொடர்பில்  ,எதிர்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரிஎல்ல எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.   நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரின் உடன்பாட்டுடன் இராஜாங்க அமைச்சர் … Read more