பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

இலங்கை டொலருக்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 302.92 ரூபாவை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 294.06 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட மிக அதிகபட்ச கட்டணம் இதுவென்பது … Read more

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் ,பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்தது…  

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது. செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் … Read more

ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 38 ரூபாய் ஊக்கத் தொகை! அமைச்சரவை அனுமதி – செய்திகளின் தொகுப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி பணத்திற்காக ஒரு அமெரிக்க டொலருக்கு 38 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புத்தாண்டின் போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த சலுகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,  Source link

உலகளவில் கொரோனா தொற்றினால் 44.81 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 44.81 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 81 இலட்சத்து 75 ஆயிரத்து … Read more

சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை சிறுமியின் இன்றைய பரிதாப நிலை(Photo)

சர்வதேச பெண்கள் தினமான இன்று தென்னிலங்கையில் சுனாமி பேரலையில் சிக்கிய ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தங்காலையில் சுனாமியில் சிக்கிய 5 வயதுடைய சிறுமி 18 வருடங்களின் பின்னர் 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். வயது, உரிய பெயர், பிறப்பு சான்றிதழ் எதுவும் இல்லாமல் வாழும் இந்த பெண் கடுமையான வறுமையில் சிக்கித் தவிப்பதாக தெரியவந்துள்ளது. சரியான வயது தெரியாத கே.ஏ.கமலா பெரேரா … Read more

இலங்கையின் வணிகப் பிரதிநிதிகள் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக, தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு

இலங்கை வணிகக் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையே ரஷ்ய வர்த்தக சமூகத்துடனான சந்திப்பொன்றை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 பிப்ரவரி 09ஆந் திகதி ஒரு ஏற்பாடு செய்தது. மொஸ்கோ வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவர் விளாடிமிர் பிளாட்டோனோவ் தொடக்க உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களை வரவேற்ற அவர், தொழில்முனைவோர்களிடையே நேரடி உரையாடலை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்க நேரில் சந்திப்பது முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வந்த தூதுக்குழுவினரின் விஜயத்திற்கு நன்றி தெரிவித்த … Read more

செல்பி எடுக்க முயன்ற சிறுவனை காணவில்லை

மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்து காணாமல்  போயுள்ளார்.  இப்பலோகம பகுதியில் உள்ள ஜயா ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் ஒருவரே கால் தவறி ஆற்றில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பலோகம பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று  மாலை காணாமல் போன சிறுவன் … Read more

மகளிர் தினத்தை முன்னிட்டு மேலும் பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்துப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன. சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி! மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – செய்திப் பார்வை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 230 ரூபா வரை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,     Source link

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்

வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08 ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். … Read more