எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபத்தனாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கு உடரட அமரபுர மகா நிகாயாவின் அனுநாயக்கர் பதவியை வழங்குவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கௌரவ பிரதமரினால் உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கான சன்னஸ் … Read more

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான சமகி வனிதா பலவேகயவினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் குறித்த குழுவினர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாட்டு மக்கள் படும் இன்னல்களை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   This is outside the residence of … Read more

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை இன்று (05) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். கௌரவ பிரதமர் இதன்போது நாரம்மல பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும்  narammalaps.dolgnwp.lk  வெளியிட்டு வைத்தார். நாரம்மல பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் 133 … Read more

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – 2, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டித் தன்மையுடன் … Read more

தேநீர் குடிக்க நான் வரவில்லை; எனது நியமனத்திற்கு இதுவே காரணம் – அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர தேநீரும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம் என்பது பிரதமரூடாக … Read more

மாத்தறை தங்கத் தீவுக்கு புதிய பாலம்…

மாத்தறை கடற்கரைப் பூங்காவை ஒட்டியுள்ள தங்கத் தீவுக்குச் செல்வதற்கு (புறாத் தீவு) புதிய பாலம் ஒன்றை நிர்மாணிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (04) பிற்பகல் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேமசிறி அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தங்கத் தீவுக்குப் பிரவேசிப்பதற்கான பாலம் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் இருந்தது. நேற்று, காலை பாலம் இடிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த தீவுக்குச் செல்ல முடியாதுள்ளதாக சங்கைக்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு அறிவித்துள்ளார். சியம் … Read more

கடும் கலக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள்! அம்பலமாகவுள்ள பல ரகசியங்கள்

சமகால அரசாங்கத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ள பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சூளுரைத்துள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல்கள் அனைத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்த தீர்மானித்துள்ளனர். தற்போது நாடு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இது எவ்வாறு ஏற்பட்டது. தங்களை பதவி விலக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதும் பாரிய பேரணிகள் … Read more

துறைமுக நகரத்தில் பணமோசடிகளுக்கு இடமில்லை : துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு.

கொழும்பு துறைமுக நகரத்தில் பணமோசடிக்கு எவ்வித இடமுமில்லை எனவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை அமுல்படுத்த முடிமெனவும் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகமும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளருமான கலாநிதி பிரியத் பந்து விக்கிரம அவர்கள் தெரிவித்தார். ‘துறைமுக நகரமும் எதிர்கால பொருளாதாரமும்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (04) ஜனாதிபதி ஊடக மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கலாநிதி பிரியத் பந்து விக்கிரம மற்றும் … Read more

அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்

பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்ளதாகவும், அங்கு தான் அவரின் சொத்துக்கள் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பணச் சலவை குற்றச்சாட்டில் பசிலை கைது செய்ய முடியும். அது நடக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிற்காக அவர் பணியாற்ற வேண்டும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அமைச்சரவையில் நடந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை எதிர்காலத்தில் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். … Read more