இலங்கையில் 60 வீதமான பெண்கள், குடும்ப வன்முறையால் பாதிப்பு

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலகப் பிரிவில் மட்டும் சுமார் 500 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார். தேசிய சமாதானப் … Read more

மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும்! ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  உக்ரைனுடன் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் உக்ரைன் அமெரிக்காவின் கட்டளையையே பின்பற்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை மேற்கு நாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்க ரஷ்யா அனுமதிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மூன்றாம் உலகப் போர் அழிவுகரமான மற்றும் அணு ஆயுத யுத்தமாக இருக்கும் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளமை … Read more

அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ளவாறு பல்கலைக்கழக கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதனால் மாணவர்களிடையே கொவிட் பரவுவதைத் தடுக்க … Read more

இலங்கையில் ATM பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

இலங்கையிலுள்ள பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான ATM அட்டைகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு ATM அட்டை வழங்கும் செயற்பாடு பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு புதிய சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியாமலும் புதிய அட்டையைக் கோர முடியாமலும் வாடிக்கையாளர்கள் உள்ளதாக தெரிய வருகிறது. எந்த … Read more

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர அழகியல் பெறுபேறுகள் இந்த வாரம்

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று நிலைமை காரணமாக, க.பொ.த சாதாரண தர இசை, நடனம் மற்றும் நாடகம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் குறித்த காலத்தினுள் நடத்தப்படவில்லை.  அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இன்றி … Read more

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் விசேட சந்திப்பு

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்லெட்டுடன் விசேட சந்தித்திப்பில் ஈடுபட்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் போது இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்கு முன்னதாக நேற்றுமுன்தினம், வத்திகானில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி பேராயர் பாப்பரசருடன் நேரில் … Read more

இன்றைய (02.03.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:   இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.03.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் உள்ள உக்ரைன் புலம்பெயர்ந்தோர் இன்று வெளிநாட்டு அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் மேலும் தெரிய வருகையில் , உக்ரைன் மக்கள் சார்பாக இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மேலும் உக்ரைன் மக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு விசாவை நீட்டித்து கொடுத்ததற்கும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். Source link

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் அரசாங்கம் மன்னிப்பு

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு மியன்மார் யூனியன் குடியரசு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளது. மியன்மார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததால், ஏழு இலங்கை மீனவர்களுடன் கூடிய ‘துஷன் புதா’ IMUL-A-0741NBO என்ற இலங்கை மீன்பிடிக் கப்பல் மியன்மார் அதிகாரிகளால் 2021 டிசம்பர் 03ஆந் திகதி கைது செய்யப்பட்டது. … Read more

செவ்வாய் கிழமையும் கொட்டிய வசூல், வலிமை சாதனை மேல் சாதனை

வலிமை படம் பல விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெருமூச்சு வந்துள்ளது. அதிலும் பிப்ரவரி மாதத்திலும் இத்தகைய வசூல் பெரிது தான். இந்நிலையில் வலிமை படம் செவ்வாய் கிழமை கூட வசூல் கொட்டியுள்ளது. தமிழகத்தில் இதுவரையே ரூ 100 கோடிகளுக்கு மேல் வலிமை வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக இவை அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் தான். நேற்று மட்டுமே தமிழகத்தின் வசூல் ரூ 4 கோடி வந்துருக்கும் என கூறப்படுகிறது. Source link