இன்றைய (28.02.2022) வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.02.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது. இந்த ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், பதவிக் காலத்தை ஜனாதிபதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. Source link
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்தல் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 33 வயதுடைய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (28) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது. இந்த சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்ததை அடுத்து உக்ரைனில் உள்ள இரண்டு மாணவர்கள் உட்பட சுமார் 40 இலங்கை பிரஜைகளை உக்ரைன்-போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது. உக்ரைனின் தற்போதைய நிலை குறித்து தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வெளியேற்றும் செயல்முறையை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக வார்சாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்குவதை அமைச்சகம் பலப்படுத்தியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. “அங்காரா மற்றும் வார்சாவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் உக்ரைனை விட்டு … Read more
இன்று (28) முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சந்தையில் ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூள் சுமார் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, 350,000 கிலோ கிராமுக்கும் அதிகமான மஞ்சள்களை பலசரக்கு … Read more
கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணம் அனுப்பும் மதிப்பு 2022ம் ஆண்டு ஜனவரி பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜனவரி 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் பெறப்பட்ட 645.3 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 61.6 வீதம் குறைவாகும். 2021 டிசம்பரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2020 … Read more
ஶ்ரீனந்தாராம விகாராதிபதி தெனிகே ஶ்ரீ சிரினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வு 27 ஆம் திகதி மல்வத்து அனுநாயக்க தேரர் வண.திம்புல்கும்புரே விமலதர்ம தேரரின் தலைமையில் நடைபெற்றது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கௌரவ நாமத்தை வழங்கி வைத்தார்.. இதன் போது மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர். அதி வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலையானது மத்திய மாகாணத்திற்கு … Read more
இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய … Read more
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 . இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண எண்ணிக்கை 44 ஆகும். இந்த வாகன விபத்துக்களுக்கு முக்கிய காரணம் கவனயீனமாகும். இதனால் சாரதிகள் வீதி ஒழுங்குமுறைகளில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது இந்திய ஊடகங்களில் இது தொடர்பான பாபா வங்காவின் கணிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. உலக நிகழ்வுகள் பலவற்றை பற்றி கணிப்புகளை வெளியிட்ட பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டியான பாபா வங்கா ரஷ்யா தொடர்பிலும் கணித்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி “ரஷ்யாவை தடுக்க முடியாது. அதாவது ரஷ்யா இந்த உலகிற்கே கடவுள் போன்ற நாடாக உருவெடுக்கும். ரஷ்யாவின் போர் காரணமாக ஐரோப்பா ஒன்றுமே இல்லாத மோசமான வெற்று நிலப்பரப்பாக மாறும். உலகில் எல்லா … Read more