பிரேசிலில் இலங்கையின் வர்த்தகம், சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இலங்கைத் தூதரகம் பிரேசில் பொதுமக்களை சென்றடைவு  

பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம், பிரேசிலில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் சங்கிலியுடன் இணைந்து முதன்முறையாக இலங்கை வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை பிரேசிலியாவில் உள்ள பேட்டியோ பிரேசில் ஷொப்பிங் மோலில் 2022 பிப்ரவரி 19 ஆந் திகதி நடாத்தியது. பேடியோ பிரேசில் ஷொப்பிங் பிரேசிலில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும். இலங்கைத் தேயிலை, கறுவா மற்றும் சுவையூட்டிப் பொருட்கள், தேங்காய்ப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், மேசை விரிப்புகள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற … Read more

பல்கலைக்கழக பட்டம் பெற சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி

பேராதனையில் இருந்து அக்மீமன பகுதியை நோக்கிச் சென்ற சொகுசு காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.   பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற சொகுசு காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அக்மீமன பகுதியைச் சேர்ந்த யு.கமகே ரத்னசேன என்ற 67 வயதுடைய நபர் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.  பேராதனைப் … Read more

தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரியில் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

ஹங்கேரிக்கான இலங்கையின் முழுமையான அதிகாரமுடைய மற்றும் அதிவிசேட தூதுவராக அங்கீகாரம் அளித்துள்ள நற்சான்றிதழ் கடிதங்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஹங்கேரி ஜனாதிபதியான ஜனோசிடர் அவர்களிடம் புடாபெஸ்டில் உள்ள சாண்டோர் மாளிகையில் வைத்து 2022 பிப்ரவரி 17 ஆந் திகதி கையளித்தார். நற்சான்றிதழ்களைக் கையளிக்கும் விழாவில் ஹங்கேரிய ஆயுதப் படைகளின் மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து, ஹங்கேரி ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கடிதங்கள் கையளிக்கப்படன. ஹங்கேரி ஜனாதிபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகள் உதவினர். நியூசிலாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கொசோவோ ஆகிய … Read more

சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Source link

உக்ரைனில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்த அறிக்கை

உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதிஇ பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காகஇ அதிகபட்சமான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும்இ பகைமையை உடனடியாக நிறுத்துவதற்காகப் பணியாற்றுமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கின்றது. இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடலின் மூலம் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து முயற்சிப்பது அவசியம் என இலங்கை வலியுறுத்துகின்றது. வெளிநாட்டு அமைச்சு, கொழும்பு. 2022 பிப்ரவரி 25

அறிகுறியற்ற கோவிட் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம்

கோவிட் தொற்றினை சாதாரணமானதாக கருதுவது புத்திசாலித்தனமானதல்ல என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளாத பல தொற்றாளர்கள் இன்னும் சமூகத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு எவ்வித கோவிட் அறிகுறிகளும் வெளிப்படுத்தப்படாமல் சுகதேகிகளை போன்று காணப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பூரண தடுப்பூசியேற்றம் மற்றும் முறையாக சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றல் என்பன கோவிட்  தொற்றிலிருந்து பாதுகாப்பினை பெறக்கூடிய ஆகச் சிறந்த வழிமுறைகளாகுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் … Read more

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு கருத்து

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி அதிகார சபை வாக்கெடுப்பு தொடர்பாக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உரித்தாவதால் அந்த சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதி தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உக்ரைன் – ரஷ்ய யுத்தம்:இலங்கை எதிர்நோக்க போகும் நெருக்கடிகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்த மோதல்கள் இலங்கைக்கு குறுகிய மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் சம்பந்தமான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் இலங்கை தற்போது அந்நிய செலாவணி மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பது இரகசியமான விடயமல்ல. இந்த யுத்த மோதல்கள் காரணமாக இலங்கை எதிர்நோக்கியுள்ள அந்நிய செலாவணி நெருக்கடி, அதேபோல் எரிசக்தி நெருக்கடிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட … Read more

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்று (25) பாராளுமன்றத்தில் முன்வைத்த இரங்கல் பிரேரணை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்க்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் பிரேரணையை நான் கௌரவ சபையில் முன்வைக்கிறேன். பொலன்னறுவையில் இருந்து அரசியலுக்கு வந்த ஆனந்த சரத் குமார ரத்நாயக்க அவர்கள், வடமத்திய … Read more

கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணம் செலுத்தாத அமைச்சர் யார்? அம்பலப்படுத்தும் ஊடகம்

இலங்கையில் கோடிக்கணக்கான ரூபா மின்சார கட்டணத்தை செலுத்ததாக அமைச்சர் தொடர்பில் தகவல் வெளியாகி இருந்தது. சுகாதார அமைச்சர் தங்கியிருக்கும் வீட்டின் மின்சார கட்டணமே செலுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கெஹலிய ரம்புக்வெலவின் வீட்டுக்கான மின்சார கட்டண நிலவை 12,056,803.38 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என சபை சுட்டிக்காட்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே மின்கட்டணம் செலுத்தவில்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் … Read more