இலங்கை, இந்திய அணிகள் : முதலாவது டி 20 போட்டி நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் முதலாவது டி 20 போட்டி நாளை (24) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சுற்றுலா   இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ரி 20 போட்டி மற்றும்  இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரி 20 போட்டி நாளை 24 ஆம் திகதியும், இரண்டாவது ரி 20 போட்டி 25 ஆம் திகதியும், மூன்றாவது ரி 20 போட்டி 27 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதேவேளை முதலாவது டெஸ்ட் … Read more

இலங்கையில் கோவிட் வைரஸால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழக்கும் 30 வயதுக்குட்பட்ட அனைவரின் மரணத்திற்கும் கோவிட் தொற்று பிரதான காரணம் அல்ல என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.   நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டார்.  தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,  கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உயிரிழந்தவர்களில் பலர் சிறுவயது முதல் நாட்பட்ட நோய்களுக்கு நீண்டகாலமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் … Read more

காத்தான்குடியில் குறுந்திரைப்பட பிற்சிப்பட்டறை செயலமர்வு

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்;பட்ட கலை ஆர்வலர்களுக்கு குறுந்திரைப்பட பயிற்சிப்பட்டறை நேற்று (22) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப் பயிற்சிப்பட்டறையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கலா மண்றங்கள்இ பாடசாலை மாணவர்கள்இ இளம் கலைஞர்கள் உட்பட சுமார் 40 பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.   கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் … Read more

12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து இந்த வாரம் தீர்மானம்

12 வயதுக்கும் குறைந்தவர்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுவது குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்பட உள்ளது. தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு சிறுவர் நோய் சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திடம், சுகாதார அமைச்சு கோரியுள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய குறித்த சங்கம், தங்களது பரிந்துரைகளை முன்மொழிய உள்ளது. இதேவேளை, 12 முதல் 16 வயது வரையிலான ஏழரை லட்சம் சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மேலும், 16 முதல் 19 வயது வரையிலான வயதுப் பிரிவினை உடையவர்களில் … Read more

 உயர்தரப் பரீட்சை: நிறைவுசெய்ய மாணவர்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள வேண்டுகோள்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் ,தங்களுக்கான அனைத்துப் பாடங்களினதும் பரீட்சைகள் முடிவடைந்திருந்தால், கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது பாடசாலை மாணவர்களுக்கு, கொவிட் தடுப்பூசி வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருவதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அத்துடன், ‘பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின், பாடசாலை அமைப்பில் உள்ள 12 முதல் 16 வயதுக்குட்பட்ட 7,45,000 மாணவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லாதவகையில் பாதுகாப்பாக தடுப்பூசி … Read more

இலங்கையில் மின்நெருக்கடி ஏற்பட்டமைக்கான பிரதான காரணம் என்ன?

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் பின்னர் பாரிய அளவிலான மின் நிலையங்கள் அமைக்கப்படாததன் விளைவுகளுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வலுசக்தி தொடர்பான பொறியியலாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டளவில் 100 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தித்துறையின் பங்களிப்பு தற்சமயம் பாரிய அளவில் குறைவடைந்திருக்கிறது. 2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தியின் மூலம் நாட்டின் 70 சதவீதமான மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாகவும் திலக் சியம்பளாபிட்டிய கூறினார். தற்போது எரிபொருள் மற்றும் போதிய … Read more

டெங்கு நோய் – மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அறிவிப்பு

டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக 2,800 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்ததாகவும், நான்கு பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் மாசி … Read more

புதிய சட்டத் திருத்தத்தால் கிடைக்கவுள்ள நன்மை: தொழில் அமைச்சர் அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தொழிலாளர் ஆலோசனைசபையின் மாதாந்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக … Read more

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 பெப்ரவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

யுகதனவி உடன்படிக்கையை விரும்பாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்: சட்டமா அதிபர்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யுகதனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து உடன்பாடில்லாத அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னம் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கை குறித்து அமைச்சரவையில் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் முரண்பாடு இருந்தால் அமைச்சரவையை விட்டு அமைச்சர்கள் விலக வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்றில் நேற்றைய தினம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதன் மூலம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதாகவே பொருள்படும் என … Read more