ஜனாதிபதி கோட்டபாய தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தொடர்ந்து எரிபொருள் விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், மின்சார சபையிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டதன் காரணமாக பெற்றோலியத்திற்காக வழங்கப்பட்ட 80 பில்லியன் ரூபா கடனை மீளச் செலுத்துவதற்கு நிதியமைச்சு இணங்கியுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். சர்வதேச … Read more

கோட்டாபயவிடம் இருக்கும் இரகசியங்கள் அடங்கிய ஆவணம்! – ஐநா ஆணையாளர் நேரடியாக தலையீடு?

தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித … Read more

ஜெனிவா கூட்டத்தொடர்! அரசாங்கத்திற்கு எதிராக காய் நகர்த்தும் சஜித்

ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சி காய் நகர்த்துகின்றது என்பது புலனாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்து இன்று நாடாளுமன்றில் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த அரசாங்கமே … Read more

பாராளுமன்றக் குழுக்கள் பல இவ்வாரம் கூடவுள்ளன

அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன. இதற்கமைவாக இன்று (22) வலுசக்தி அமைச்சுசார் ஆலோசனைக்குழு, விவசாய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. நாளை (23) தொழில் அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன. இதேவேளை, பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் கூட்டமும் இன்று (22) நடைபெறவுள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் … Read more

இலங்கை வந்து சென்ற அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி!

அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஜோர்ஜ் குளூனி கடந்த 19ம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தனி விமானத்தில் அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு சென்ற நிலையில், இம்மாதம் 19ம் திகதி அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். எரிபொருள் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்காக அவர் தனது தனிப்பட்ட ஜெட் விமானமான Bombardier Express Global இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்த விமானத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை … Read more

வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு 'விமலகீர்த்தி ஸ்ரீ விஜித' என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவி வழங்கல்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம சங்க சபையினால் வெலிகம தெனிபிடிய ஸ்ரீ கங்காதிலக மஹா விஹாராதிபதி கௌரவ மெத்தவத்தே சோரத மஹாஸ்திவிரபாத தேரருக்கு ‘விமலகீர்த்தி ஸ்ரீ விஜித’ என்ற கௌரவத்துடன் தென் மாகாண துணை தலைமை சங்கநாயக்கர் பதவிக்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் 19.02.2022 அன்று பிற்பகல் கலந்து கொண்டார். கோட்டே ரஜமஹா விகாரையில் அமைந்துள்ள கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமாக்ரி தர்ம மஹா சங்க சபை கேட்போர் … Read more

இலங்கையில் கார் கொள்வனவு செய்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

இலங்கையில் கார்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்கள் சரியான தகவல்களின்றி அதிக விலை கொடுத்து பயனற்ற கார்களை கொள்வனவு செய்வதாக தெரியவந்துள்ளளது. இதனால் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை கொள்வனவு செய்பவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் தனது அனுபவத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “இது என தனிப்பட்ட அனுபவம். Toyota Vitz 2016 ரக கார் ஒன்றை நான் … Read more

உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் குறித்த ஆலோசனை

உக்ரேனில் இடம்பெற்று வரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.  கீவ்விற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், உக்ரேனில் வசிக்கும் பதினான்கு மாணவர்கள் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் நோக்கில் நெருங்கிய தொடர்பில் உள்ளது. உக்ரேனில் உள்ள பதினான்கு இலங்கை மாணவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகம் எஞ்சிய எட்டு மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. உக்ரேனில் உள்ள அனைத்து இலங்கைப் பிரஜைகளும் அவதானத்துடன் செயற்படுமாறும், அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் வெளிநாட்டு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. உக்ரைனுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை தற்போது தவிர்த்துக் கொள்ளுமாறு அனைத்து இலங்கை பிரஜைகளையும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு அமைச்சு கொழும்பு 2022 பிப்ரவரி 21

தடுமாறும் இலங்கை! திணறும் ஆட்சியாளர்கள் – திவால் நிலையை தொட்டுவிட்டதா இலங்கை?

சர்வதேச ரீதியில் கடந்த சில மாதங்களாக இலங்கையின் பொருளாதார நிலை முக்கியத்துவம் பெற்று வருகின்றது. தற்போது காணப்படும் மிகப் பெரிய பிரச்சினையாக டொலர் நெருக்கடி காணப்படுகின்றது. இதன் தாக்கத்தினை இலங்கை மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகின்றனர். சாமான்ய மனிதர்களால் சமாளிக்க முடியாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. மிகத் தெளிவாகக் கூறினால் அன்றாடம் இரண்டு மரக்கறிகள் மற்றும் ஒரு மாமிச வகையுடன் தமது உணவு பழக்கத்தை கொண்டிருந்த ஒரு குடும்பம் ஒரு … Read more

நாட்டினுள் எரிபொருளுக்கான நாளாந்த கேள்வி அதிகரிப்பு

நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக் டொன்னாக இருந்த டீசலுக்கான கேள்வி தற்போது 8,000 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதேபோல், 3,000 மெற்றிக் டொன்னாக இருந்த பெற்றோலுக்கான வாராந்த கேள்வி, 4,500 மெற்றிக் டொன் வரை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இது ஒரு பாரதூரமான நிலை என்று சுட்டிக்காட்டிய அவர், இதனைக் … Read more