பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியாவிற்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே நுவெரெலியாவிற்கான விஜயமொன்றை நேற்று (30) மேற்கொண்டிருந்தார். உயர் ஸ்தானிகர் சாறா ஹல்டன் ஒபே மற்றும் நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது, நுவரெலிய மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள், சுற்றுலாத் துறை, விவசாய, கல்வி மற்றும் சமூகமயப்படுத்தல் போன்றன தொடர்பாக இச்சந்திப்பின் போது இருவரும் கலந்துரையாடினர். அத்துடன், மாவட்ட செயலாளர் நந்தன கலபட, உயர் ஸ்தானிகர் சாறா … Read more

கடவுச்சீட்டு பெற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு வீட்டுக்கு அனுப்பப்படும் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார். அதற்கமைய, நாட்டின் எந்த பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ‘101 கதா’ நிகழ்ச்சியில் … Read more

படையினரால் பொலன்னறுவையில் டெங்கு நோய்க்கு எதிரான வேலைத்திட்டம்

படையினரால் பொலன்னறுவையில் டெங்கு நோய்க்கு எதிரான வேலைத்திட்டம் இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகள் பணிப்பகம் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, கிழக்கில் டெங்கு தடுப்பு திட்டம் புனானி 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், 234 வது காலாட் பிரிகேடின் படையினரால் (24) முன்னெடுக்கப்பட்டது. 7 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 12 கெமுனு ஹேவா’ படையணியின் படையினர் பொலன்னறுவை சுகாதார வைத்திய … Read more

நாட்டுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை நிறுத்த முயல்பவர்களை அம்பலப்படுத்துவேன் – அமைச்சர் பந்துல குணவர்தன.

நாட்டுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்களை நிறுத்த முயல்பவர்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் வெளியிடுவேன் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட சலுகைச் சட்டம் உள்ளதாகவும், அதன் கீழ் அனைத்தையும் வெளிப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், 2017ஆம் ஆண்டு … Read more

ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற சி.எஸ்.கே அணிக்கு ரூ.20 கோடி ரூபா பணப்பரிசு

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய மதிப்பின்படி 20 கோடி ரூபா பணப்பரிசை பெற்றுள்ளது. நேற்று (29) இரவு அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களை பெற்றது. இவ்வணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 47 பந்தில் 96 ஓட்டங்களும் (8 பவுண்டரி, 6 சிக்சர் ), விர்த்திமான் சஹா … Read more

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் ஒத்தழைப்புக்கள் பெறுவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை நேற்று (29) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் குற்றவாளிகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதால் பாரிய சமூகச் சிக்கல்கள் பல உருவாகியுள்ளதாகவும், அதனைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹிணி குமாரி விஜேரத்ன வலியுறுத்தினார். சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களான நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் … Read more

இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு…

தேசிய எரிபொருள் அனுமதி QR அமைப்பின் ஊடாக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பதிவு செய்யப்பட்ட வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீற்றரும், ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும், மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீற்றரும் ஒதுக்கப்படும். கார் வகைக்கான ஒதுக்கீடு வாரத்திற்கு 40 லீற்றராக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த எரிபொருள் … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு இலவச 'சிசு செரிய' பஸ் சேவை

அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானியங்களைப் பெறும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் பிள்ளைகள் ‘சிசு செரிய’ பஸ் சேவையில் இலவசமாக பயணிக்கும் வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், அந்த பிள்ளைகளுக்கு … Read more

எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்து டிஜிட்டல் மயப்படுத்தப்படும்

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும், மக்கள் சில்லறை காசுகளை மாற்றிக் கொண்டு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை இன்னும் … Read more