கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் … Read more

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் – ரணில் வகுக்கும் வியூகம்

Courtesy: கூர்மை வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் உள்ள காணிகளை கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் சில திணைக்களங்கள் அபகரித்து வரும் சூழலில், காணி கட்டளை சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  உத்தரவிட்டிருக்கிறார். அதுவும் தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு முதல் நாள் இந்த உத்தரவை ரணில் பிறப்பித்திருக்கிறார். தமிழர் பிரதேசங்களில் பௌத்தமயமாக்கல் நாளுக்கு நாள் வெவ்வேறு வடிவங்களில் அரசியல் யாப்புச் சட்டங்களுக்கு மாறாகவும், சட்டங்களுக்கு அமைவானது … Read more

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான ஐந்தாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான ஐந்தாவது பணியாளர் சந்திப்பு 2023 மே 24 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடல் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், பாகிஸ்தான் கடற்படைத் தூதுவர் கொமடோர் அஹமட் ஹுசைன் (Commodore Ahmed Hussain), இலங்கை கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன மற்றும் கடற்படையின் பிரதித் தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க ஆகியோரை சந்தித்து … Read more

இலங்கையில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

டிஜிட்டல் மயமாக்கலின் போது இலங்கை – ஜப்பான் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது குறித்து அவதானம். ஜனாதிபதி மற்றும் வியட்நாம் பிரதி பிரதமருக்கிடையிலான சந்திப்பில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆராய்வு. முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு ஏற்பாடுகளை இலங்கை அண்மைக்காலங்களில் மேற்கொண்டுள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். “இலங்கை பொருளாதாரத்தின் மீள் கட்டமைப்பு மற்றும் ஜப்பான் தொழில் வாய்ப்புக்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் டோக்கியோ நகரில் (26) இடம்பெற்ற வர்த்தக வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே … Read more

மின் விளக்குகளை பயன்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் (25 மே 2023) அதிகாலை புல்முடை, அரிசிமலை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரொதமாக மின் விளக்குகளை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) பேருடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, (2023 மே … Read more

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலியில் இருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்மேற்கு ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இலங்கை கடற்படையினர் (2023 மே 26) நடவடிக்கை எடுத்துள்ளனர். 2023 மே 23 ஆம் திகதி திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு (06) மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ‘Krevin Baba 01’ (பதிவு எண். IMUL-A-0921 CHW) … Read more

பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவை பாராளுமன்றத்தில் பாராட்டப்பட்டது

• ஏழு சபாநாயகர்களின் கீழும், பல்வேறு அரசாங்கங்களின் கீழும் பாராளுமன்றத்தின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க முன்னாள் செயலாளரினால் முடிந்தது – பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன • பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு உட்பட தனது சேவைக்காலத்தில் முகங்கொடுத்த சவாலான சூழ்நிலைகளை அவர் சரியாக நிர்வகித்தார் – பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ• 29 வருடங்களாக அவர் ஆற்றிய பெறுமதிமிக்க சேவை, பாராளுமன்றத்தின் நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் பற்றிய பரந்த அறிவு மிகவும் பாராட்டத்தக்கது – சேவைநலன் … Read more

ஆசியாவின் பலம் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

பூகோள புவிசார் அரசியல் செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பிராந்தியத்தின் வகிபாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆசிய நாடுகள் குரல் எழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று (25) ஆரம்பமான ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28வது சர்வதேச மாநாட்டில் (Nikkei Forum) கலந்து கொண்டு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் பிரதிப் பிரதமர்கள் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை வலியுறுத்தினார். ஜப்பானிய நிக்கேய் பத்திரிகை வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த … Read more

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் ஒப்படைக்கவும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளை விரைவாக விண்ணப்பதாரர்களிடம் ஒப்படைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எக்காரணம் கொண்டும் பரீட்சை அனுமதி அட்டைகளை விண்ணப்பதாரர்களிடம் வழங்காது, அதிபர்கள் தம்வசம் வைத்திருக்கலாகாது என்பதுடன், எவரேனும் ஒரு விண்ணப்பதாரருக்கு அனுமதி அட்டை கிடைக்காமல் பரீட்சை எழுத முடியாமல் போகுமிடத்து அதன் முழுப் பொறுப்பையும் அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

தீவிரமடைந்துள்ள யுத்த களமுனை! உக்ரைன் மருத்துவமனையின் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்

கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்ய விமானப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் குறித்த தாக்குதலில் 23 பேர் காயமடைந்துள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆபத்தான நிலையில் மூவர் காயமடைந்த 23 பேரில் 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு … Read more