ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் பொதுமக்கள் பாவனைக்கு…

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம், 20ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி வைபவ ரீதியாக பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீர் அமைப்பையும் திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்காக … Read more

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் – ஜனாதிபதி

சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு! வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம … Read more

லண்டனில் தமிழருக்கு கிடைத்த வாய்ப்பு…!

லண்டனில் தமிழர் ஒருவர் குராய்டன் நகர துணை மேயராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுன்சிலர் அப்பு தாமோதரன் சீனிவாசன் என்பவரே இவ்வாறு துணை மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த இவர், புலம்பெயர்ந்த இங்கிலாந்து நாட்டில் தமிழ் மொழி, கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறார். இதேவேளை இவர் பணியாற்றிய தொழிற்சாலையில் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, தொழிலாளர் கட்சியில் உறுப்பினராக இருந்துள்ளார். சேவைகள் அதன் மூலம் 2018 … Read more

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய மத போதகருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பிய பின்னர் மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு கையளிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கைது செய்யப்படுவார் எனவும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அமலாக்கச் சட்டத்தின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிய வருகிறது. பல வருடங்களுக்கு முன் பேயவா என்ற பிரபல மருந்து விற்கும் விளம்பரத்தில் நடிகராக தோன்றி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெரோம் … Read more

சிங்கப்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்! தொடரும் மர்மம்

சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் நேற்று (20.05.2023) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நதிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்திருந்தார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், வீட்டு உரிமையாளரின் கடும் அழுத்தத்தை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் அவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து பாய்ந்த காணொளியொன்றும் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் பிரேத பரிசோதனை அறிக்கையில், … Read more

கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் அவர்களின் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய … Read more

கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அருகில் 16 பேர் அதிரடியாக கைது

பத்தரமுல்ல குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் வைத்து போதைப்பொருள் வைத்திருந்த 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கம பொலிஸ் நிலையம் மற்றும் நுகேகொட பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 7 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 20 கிராம் 900 மில்லிகிராம் கேரள கஞ்சா மற்றும் 80 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 16 பேர் கைது … Read more

விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பிரச்சினைகளை நிவர்த்திக்க விவசாய செயலாளர் அலுவலகம்

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற அதிகாரிகளை … Read more

நாட்டின் சில பாகங்களுக்கு அவ்வப்போது மழை….

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் … Read more

தேசிய மட்ட தடகள போட்டிகளில் பதக்கங்களை சுவீகரித்த யாழ்.மாணவர்கள்(Photos)

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டிகள், யாழ்ப்பாணத்தின் தியகம ராஜபக்ச மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. பருத்தித்துறை இந் போட்டியில்,பருத்தித்துறை – ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளனர். இதில் ஹாட்லிக் கல்லூரி மாணவனான தருண் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.60 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அத்துடன் ஆர்.சஞ்சய் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.91 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை … Read more