ஈரான் படைகள் இஸ்ரேல் வரை…! அமெரிக்காவின் இரகசிய காய் நகர்த்தல் (Video)

1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி ஈரான் மீதான முழு அளவிலான யுத்தத்தை ஆரம்பித்தது ஈராக். மனித அலைகளாக சென்ற ஈராக் படைகள் மிகப்பெரிய அனர்த்ததை ஈரானில் விளைவித்தன. இராசாயண ஆயுதங்களின் பாவனை உலகத்தின் ஆச்சரியக் கண்களை அகல விரிக்கும் படி செய்தது. எண்ணெய் வியாபாரம் மீது உலக வல்லரசுகள் கொண்டிருந்த வெறிப்பிடித்த அவா அந்த வளைகுடா யுத்தத்தின் அத்துணை அத்தியாயங்களிளும் பிரதிபலித்து கொண்டே இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய … Read more

கொழும்பில் பிரபல நடிகை வீட்டில் பணியாற்றிய பெண்ணின் மரணத்தில் மர்மம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video)

“கொழும்பில் அமைந்துள்ள பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்திற்கு நீதி வேண்டும்” என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்துள்ளார். ஹட்டன் – ப்ரோட்டெக் அலுவலகத்தில் நேற்றைய தினம் (19.05.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிவித்தாவது, “கடந்த 11 ஆம் திகதி தெமோதர பிரதேசத்திலிருந்து கொழும்பிலுள்ள பிரபல நடிகையின் … Read more

மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு. கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு – மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேரவாத பௌத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்காக பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலகம் கட்டளைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் மல்வத்து, அஸகிரிய பீடாதிபதிகளிடத்தில் கையளிப்பு.திரிபீடகம் மற்றும் பௌத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை.மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்

டுபாயில் இருந்து தங்கத்துடன் இலங்கை வந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் நேற்று அவரை கைது செய்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதத்த சில்வா தெரிவித்தார். கொழும்பில் வசிக்கும் 35 வயதான வர்த்தகரான இவர் அடிக்கடி விமானங்களில் சென்று வியாபாரம் செய்து வருவதாக தெரியவந்துள்ளது. சூட்கேஸ்களில் சுற்றப்பட்டிருந்த தங்கம் இவர் டுபாயில் இருந்து EK-650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் நேற்று … Read more

இலங்கையிலிருந்து டொலர்களை சம்பாதிப்போருக்கு கிடைக்கவுள்ள விசேட அனுமதி

வெளிநாட்டை தளமாகக் கொண்ட வாடிக்கையாளர்களுடனான வணிகங்கள் மூலம் டொலர்களை கொடுப்பனவாக பெறும் இலங்கையையர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிகளை வழங்குமாறு கோரி புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார். மேலதிக விபரங்களுக்கான தொடர்பு “வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடனான நேரடி ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையிலிருந்து சேவைகளை ஏற்றுமதி செய்யும் தனிநபர்களை சேர்த்துக்கொள்ளவும் மற்றும் மின்சார கார் அனுமதிக்கு தகுதி பெறுவதற்கு டொலர்களில் பணம் பெறவும் கோரும் அமைச்சரவை … Read more

14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்

தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் நேற்று (19) நடைபெற்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை … Read more

கனடாவுடன் இராஜதந்திர போரில் இறங்கிய இலங்கை-செய்திகளின் தொகுப்பு

யுத்த வெற்றியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது. நேற்றைய தினம் கனடா பிரதமர், 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் மற்றும் யுத்தம் நிறைவடைந்த தினத்தை நினைவுகூரும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார … Read more

நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ‘ சஞ்சாரக உதாவ 2023’ பிரதமர் தலைமையில் ஆரம்பம்…

இலங்கையின் சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் செயற்திறமாக பங்குகொள்ளும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சியான ’சஞ்சாரக உதாவ 2023’ நேற்று (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தினால் (SLAITO) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’சஞ்சாரக உதாவ 2023’ கண்காட்சியானது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் அத்துடன் இத்துறையில் பிரவேசிக்க விரும்பும் எவருக்கும் அவர்களின் உற்பத்திகள் மற்றும் … Read more

ஈழத் தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு: தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியாக ‘பிரதிநிதித்துவம்’ மற்றும் ‘நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு’ பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அனுப்ப வலியுறுத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோரினால் (18.05.2023) அன்று இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆயுதப் போரின் இறுதி வாரங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் பலியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. … Read more