கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கல்வி, திறன் விருத்தி மற்றும் விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று  முன்தினம் (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து ரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் … Read more

சகோதரர்களுக்கு இடையில் மோதல் – கொழும்பின் புறநகரில் துப்பாக்கிச் சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான கடவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை, சூரியபாலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் அந்த நபர்கள் காயமடைந்த நபரின் மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் … Read more

உயர் மட்ட பாதுகாப்பில் இலங்கையின் விமான சேவை

இலங்கையில் விமானப் பாதுகாப்பை மிக உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்பட்ட விமானப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கணக்காய்வின் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையைப் போலவே இலங்கையின் வான்வெளியும் மிகவும் பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இந்த சர்வதேச கணக்காய்வு … Read more

பிரதமர் அலுவலகத்திற்கு தவறான தகவல்: வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக முறைப்பாடு

பிரதமர் செயலகத்திற்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளதால் தனது நடமாடும் சுதந்திரம் உட்பட தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் வவுனியா பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் காணியற்ற அரச ஊழியர்களுக்கு காணி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர்களில் பலர் அதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவித்து பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சமூக … Read more

இலங்கையின் அபிவிருத்தி திட்டத்தில் அமெரிக்காவின் முக்கிய திட்டம்

நாட்டின் அனர்த்த முகாமைத்துவத் துறையை உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு படையணியின் உயர்மட்ட தூதுக்குழுவுடன் நேற்று (18.05.2023) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பேரிடர் முகாமைத்துவ நிலையம் அமைப்பு மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மையத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார். உலகளாவிய தரத்திற்கு ஏற்ப அனர்த்த … Read more

சிங்கப்பூரில் மர்மமான முறையில் இலங்கை பெண் மரணம்

சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த இலங்கை பெண் ஒருவர் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொடுவ – மொட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 41 வயதான நடிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிங்கப்பூருக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில், அவர் பணிபுரியும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியான காணொளி இது குறித்து குறித்த பெண் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிக்கையும் … Read more

ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வு

14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு நாளை (19.05.2023) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர தேசிய போர்வீரர் நினைவுத்தூபியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் ரணவிரு சேவா அதிகார சபையானது இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. நாட்டின் போர் … Read more

பிரேசில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடை

பிரேசில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஊடக அறிக்கை வருமாறு:  

மூன்று நாட்களில் கடவுச்சீட்டை பெறலாம்! வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் கடவுசீட்டு அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,“வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம். வீட்டிலிருந்தவாறே கடவுசீட்டு பெறலாம் இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் … Read more

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பு

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ கேட்டுக் கொண்டார். அலரி மாளிகையில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் வர்த்தகம், சுற்றுலா, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. யுனான் மாகாண அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை வந்திருக்கும் வாங் யூபோ, இலங்கையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு … Read more