எதிர்வரும் 21ஆம் திகதி சர்ச்சைக்குரிய போதகரின் ஜெபக்கூட்டம்! இரத்தக் காடாகும் நாடு – கடும் எச்சரிக்கை

ஏனைய மதங்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட கிறிஸ்தவ மதப்போதகர் ஜெரோம் பெர்ணான்டோவினால் எதிர்வரும் 21ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜெபக் கூட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் நாடு இரத்த மற்றும் நெருப்புக் காடாகும் அபாயம் உள்ளதாகவும் பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கடுமையாக எச்சரித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (17.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், … Read more

இராணுவத்தினரின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை பேணி அவர்களை பாரம்பரிய கடமைகளில் ஈடுபடுத்த  நடவடிக்கை

பாதுகாப்பு சீர்திருத்தங்கள் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான, அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அண்மையில் இந்த … Read more

நடிகை வனிதாவின் மகன் வெளியிட்ட அடுத்த புகைப்படம்! ஹீரோவையே மிஞ்சிய ஸ்டைலை பாருங்க

வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி முன்னணி ஹீரோவை தோற்கடிக்கும் அளவிற்கு புதிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகர் வனிதா தமிழ் திரையுலகில் சினிமா குடும்பத்தின் பின்புலத்தில் இருந்து வந்த நடிகை வனிதா தனது பெற்றோர், உறவினர்களை விட்டு பிரிந்து தனது இரண்டு பெண் குழந்தைகளையும் பார்த்து வருகின்றார். நடிகை வனிதா 2000ம் ஆண்டும் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். ஆகாஷ் வனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு … Read more

இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது குற்றமா! அம்பிகா சற்குணநாதன் விளக்கம் (VIDEO)

இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது குற்றமாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். இனப்படுகொலை என கூறுவோரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை போரில் மரணத்தவர்களை பொதுவெளியில் நினைவுகூர கூடாது என ராஜபக்ஸ ஆதரவு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களையும் முன்னாள் ஆணையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் … Read more

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருக்கும் கூகுள் கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் கணக்குகளை அங்கீகரிக்காமல் அணுகுவதை தடுப்பது உள்ளிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு கணக்குகளை அகற்றினால் Gmail, Docs, Drive, Meet, Calendar, Youtube மற்றும் Google உள்ளிட்ட அனைத்து … Read more

தென்னிலங்கையில் காணாமல்போன யாழ் இளைஞன்: ஊடகங்களை நாடிய தாயார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பு- புறக்கோட்டையில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல்போயுள்ளார். இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக (2022.10.13) அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவித்துள்ளார். ஊடகங்களை நாடிய தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் … Read more

கிழக்கு ஆளுநர் நியமனம்: நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை – ஜீவன்

தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  மேலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். … Read more

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

சீனா ஒரு முறையான பங்கை வகிக்க வேண்டும்! அமெரிக்கா கோரிக்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை எளிதாக்கும் வகையில், இந்தியா மற்றும் பெரிஸ் கிளப் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட கடன் வழங்குனர் பேச்சுவார்த்தைகளுக்கான பொதுவான கட்டமைப்பில் சீனா ஒரு முறையான பங்கை வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியுள்ளது. இலங்கை பொருளாதாரம் எதிர்கொண்ட நெருக்கடி எழுபது ஆண்டுக்களுக்கு மேலாக இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரலில் நாடு, தமது வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.    இதன்போது முக்கிய கடன் வழங்குனர் … Read more

வெற்றிலைக்கேணியில் கவனிக்கப்படாத பாதை படையினரால் சீரமைப்பு

553 வது காலாட் பிரிகேட்டின், 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 10வது களப் பொறியியல் படையணி படையினர் இணைந்து வெற்றிலைக்கேணிக்கும் முள்ளியனுக்கு இடையிலான பாழடைந்த பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ் வீதி பொதுமக்கள் மற்றும் படையினர் தமது நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதால் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் பாதை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் காணப்பட்ட நிலையில் வாகனங்கள் செல்ல … Read more