லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான 'வெளிநாட்டு வீரர்களின் பதிவு' ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான ‘வெளிநாட்டு வீரர்களின் பதிவு’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. LPL தொடரின் நான்காவது தொடர் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய வெளிநாட்டு வீரர்கள் LPL Player Registration Portal – Sri … Read more

வவுனியாவில் எள் அறுவடையில் அதிக விளைச்சல்

வவுனியா மாவட்டத்தில் பிரதான பயிராக பயிரிடப்படும் எள் பயிர்ச்செய்கையில் இம்முறை அதிக விளைச்சலைப் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் தற்போது எள் பயிர்ச்செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளதுடன் சந்தையில் எள்ளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16000 ஏக்கர்களில் எள் பயிரிடப்பட்டுள்ளது. சந்தையில் ஒரு கிலோ எள்ளின் விலை 800 – 1000 ரூபாய் வரை உள்ளது. இதனால் எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இம்முறை அதிக பொருளாதார நன்மை கிடைத்துள்ளது. தற்போது மாவட்டத்தில் எள் அறுவடை நடைபெற்று … Read more

ஒரு யுகமுடிவும் அதன் பின்னரும்

ஊழிக்காலத்தில் அல்லது ஒரு யுகமுடிவில் ஒன்றில் பதுங்கு குழியை, பிணக்குழியை அல்லது மலக்குழியை வெட்டிக் கொண்டிருந்த மக்கள் எதைச் சமைத்தார்கள்? எதைச் சாப்பிட்டார்கள்? எதைக் குடித்தார்கள்? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு நேரம் இருந்ததா? அல்லது சாப்பிடவும் குடிக்கவும் அவர்களுக்கு பசி தாகம் இருந்ததா? உணவு ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட போர்க்களம் அதுவென்று தமிழ் சிவில் சமூக அமையம் தனது அறிக்கை ஒன்றில் கூறியது. அந்நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சமைக்க வழியில்லாதவர்களுக்கு கஞ்சி வழங்கியது. கஞ்சிக் கொட்டில்கள் … Read more

மின்சார பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க புதிய நடைமுறை

மின்சார பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மின்சார பாவனை குறித்தான நடமாடும் சேவையின் விழிப்புணர்வு கூட்டம் நேற்றைய தினம் (16) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தற்போது மின் பாவனையாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா நாட்டுக்குச் செல்ல முயற்சித்தவர்களை இன்று கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் அடங்குவதுடன், கிராம உத்தியோகத்தரும் உள்ளதாக தெரிய வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார். 22 முதல் 36 வயதிற்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சந்தேக … Read more

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Batti Malv’ என்ற கப்பல் 46 மீட்டர் நீளமும், மொத்தம் 101 பணியாளர்களையும் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் MAN Singh M Mane மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் … Read more

மகிந்த உள்ளிட்ட குழுவினர் மீது விதிக்கப்பட்ட தடை! முழுமையாக நீக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பலருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு இன்று (17.05.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 09 போராட்டம்  2022 மே 09 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஞ்சனா ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் … Read more

மூன்று புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம்! மீண்டும் முகக்கவசம் அணிவது முக்கியம் – மக்களுக்கு எச்சரிக்கை

நாளாந்தம் உறுதிப்படுத்தப்படும் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் கோவிட் இறப்புகளை கருத்தில் கொண்டு, அடிப்படை மட்டத்தில் வைரஸ் பரவுவதை உறுதிப்படுத்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.  நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம் இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் நாடு ஒருவித அனர்த்தத்தை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இவ்வாறானதொரு பின்னணியில் மீண்டும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு … Read more

23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்; 23.05.2023 நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், துண்டுப் … Read more